சினிமா ரசிகர்களால் “புன்னகை அரசி” என்று அன்போடு அழைக்கப்படும் ஒரே நடிகை சினேகா மட்டும் தான். சினேகா பார்க்க வசீகரமாகவும், குடும்பாங்கான முகச்சாயல் கொண்டதால் இவருக்கு படவாய்ப்புகள் ஒரு நேரத்தில் குவிந்தது.
கவர்ச்சி இல்லாமல் ஒரு நடிகையை ரசிகர்கள் பெரிதும் ரசிப்பார்கள் என்றால் அதில் சினேகாவும் ஒருவர். இவர் நடித்த நிறைய படங்கள் பெரிதும் கவர்ச்சி இல்லாமல் இருக்கும். இவருக்கும் நடிகர் பிரசன்னா அவர்களும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட சினேகா அவர்களுக்கு ஒரு மகனும் உண்டு.“கோவா” என்ற படத்தோடு சினி உலகிற்கு ஒரு பிரேக் கொடுத்த சினேகா நீண்ட இடைவேளைக்கு பிறகு சிவகார்த்திகேயனின் “வேலைக்காரன்” என்ற படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடித்து இருந்தார்.
அதன் பின் சில வருடங்கள் கழித்து தற்பொழுது தனுஷ் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகி இருக்கும் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து நடிப்பில் மிரட்டி இருந்தார்.
இணையத்தில் எப்போதும் ஏதாவது பழைய புகைப்படங்கள் திடீர் என்று ட்ரெண்ட் ஆகி வரும் அது போல ஹோம்லியாக மட்டும் நடித்த சினேகா படுகிளாமராக நடித்த படங்களின் புகைப்படங்கள் இணையத்தில் தற்பொழுது வைரல் ஆகி வருகிறது.
அந்த புகைப்படம் பல வருடங்களுக்கு முன் மம்முட்டி அவர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த “அறுவடை” என்ற படத்தின் புகைப்படங்கள் ஆகும். இந்த புகைப்படங்களில் குளியல் தொட்டியில் ரோஜா பூ இதழ்கள் நிரப்பி அதில் சினேகா குளிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள் சினேகா-வா இப்படியெல்லாம் போஸ் கொடுத்துள்ளார்..? என்று வாயை பிளந்து வருகிறார்கள்.