‘மாஸ்டர்’ படத்தின் விஜயின் தோழியாக நடித்த நடிகை சங்கீதா அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படத்திலும் நடித்துள்ளார். மேலும் அவர் வலிமை படம் குறித்து சமீபத்தில், முக்கிய அப்டேட் ஒன்றையும் கொடுத்ததார்.
ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். போனி கபூர் இப்படத்தைத் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜ இசையமைக்கிறார். 2019-ம் ஆண்டே இப்படம் தொடங்கப்பட்டாலும் தற்போது வரை அதிகார்பூர்வமாக படம் எந்த நிலையில் உள்ளது என்ற அப்டேட் ஏதும் படக்குழு வெளியிடவில்லை.
இந்நிலையில், நடிகை சங்கீதா வலிமை படம் குறித்து பேசுகையில் “வலிமை படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 90 சதவீதம் வரை நிறைவடைந்துவிட்டது. கூடிய விரைவில் படம் குறித்த அப்டேட் வெளியாகும்.
படத்தில் அஜித் உடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் ஹெச்.வினோத் உடன் பணியாற்றியது சிறப்பான அனுபவம்” என்றும் கூறியிருந்தார்.
சந்தானம் நடிப்பில் உருவான பாரிஸ் ஜெயராஜ் படத்திலும் சிறு கதாபாத்திரத்தில் தோன்றினார் அம்மணி. மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனனை விடவும் அதிகம் கவனிக்கப்பட்டார் சங்கீதா.
இவருக்கென தனி ரசிகர் வட்டமும் ஆன்லைனில் வட்டமிட்டு வருகின்றது. படங்களில் குடும்ப பாங்கினியாக தோன்றும் இவர் இன்ஸ்டாகிராமில் மாடர்ன் உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கமெண்டி வருகிறார்கள்.