நடிகைகள் படவாய்ப்பிற்காக கவர்ச்சியில் இறங்க முடிவெடுக்கும் நிலையில் நடிகை ரெஜினா கவர்ச்சியை குறைக்க முடிவு செய்துள்ளாரம்.
தமிழகத்தை பூர்விகமாக கொண்ட ரெஜினா கஸ்ஸாண்ட்ரா, தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
தமிழில் அவ்வப்போது திரைப்படம் நடித்து வந்தாலும் தெலுங்கில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அண்மையில், ரெஜினா நடித்து வெளியான தெலுங்கு திரைப்படம் போதிய வரவேற்பை பெறவில்லை. திரைப்படத்தில் ரெஜினா சற்று தூக்கலான கவர்ச்சியில் நடித்திருந்தாராம்.
அந்த திரைப்படம் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானதாம். இதனால் ரெஜினா தற்போது அதிக கவர்ச்சி காட்டி பெயரை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்துள்ளாராம்.
நடிகைகள் பெரும்பாலும் தங்கள் மார்க்கெட்டை தக்கவைத்துக்கொள்ளவும், படவாய்ப்பிற்காகவும் கவர்ச்சியில் இறங்குவது வழக்கம். ஆனால் ரெஜினாவுக்கு கவர்ச்சியே ஆப்பு வைத்துள்ளது என்று பலரும் கூறினார்கள்.
பாலிவுட் இயக்குநர் ஷெல்லி சோப்ராதர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஏக்
லடிக்கி கோ தேகா தோ ஐசா லகா’ படத்தில் ரெஜினா லெஸ்பியன் கதாபாத்திரத்தில்
நடித்துள்ளார்.
இவரின் சமீபத்திய புகைப்படங்கள் எல்லாம் கவர்ச்சியின் டிகிரி முடித்த ரகம்
போல் இருக்கிறது. அப்படி ஒரு உடை சும்மா ஜிகு ஜிகு என சிக்கென்று
கவர்ச்சியாக இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள், “கிளாமர் குயின் – செதுக்கி வச்ச சிலை…” என்று வர்ணித்து வருகிறார்கள்.