நடிகைகள் பலர் பொது நிகழ்ச்சிகள் மற்றும் பட விழாக்களுக்கு கவர்ச்சி உடை அணிந்து வருவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்கள். இதனால் சர்ச்சைகளுக்கு ஆளாகிறார்கள். நடிகை ஸ்ரேயா சில வருடங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த பட விழாவில் அரைகுறை உடை அணிந்து கலந்து கொண்டதால் விமர்சனத்துக்கு ஆளானார்.
அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. இதுபோல் பல நடிகைகள் கவர்ச்சி உடைகளில் விழாக்களுக்கு வந்து ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி போலீசாரால் மீட்கப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன.
நடிகை கங்கனா ரணாவத்தும் தற்போது கவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களிடம் சிக்கி தப்பித்தால் போதும் என்று ஓடிய சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. கங்கனா ரணாவத் ‘தாம்தூம்’ படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.
இந்தியில் வெளியான ‘குயின்’ படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார். இந்தி பட உலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையும் இவர்தான்.
ஒரு படத்துக்கு ரூ.12 கோடி வாங்குவதாக கூறப்படுகிறது. இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷனை காதலித்து அவருடன் சுற்றி விட்டு தகராறு ஏற்பட்டதால் பிரிந்து இருக்கிறார்.
2 பேரும் ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டுகள் சொல்லி வக்கீல் நோட்டீசும் அனுப்பி இருக்கிறார்கள். மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள கங்கனா ரணாவத் கவர்ச்சியாக வந்து இருந்தார்.
வெறும் முண்டா பனியன் அணிந்து இருக்கும் அம்மணி தன்னுடைய முன்னழகின் அந்த பகுதி தெரியும் அளவுக்கு மோசமான கவர்ச்சியை வாரி இறைத்தபடி நடந்து சென்றார். அப்போது எடுக்கபட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.