திருமணத்திற்குப் பிறகு நீண்ட காலமாக நடிக்காமல் இருந்த நஸ்ரியா நசீம் இப்பொழுது மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்து ஆரம்பமே அதிரடியாக வித்தியாசமான கெட்டப்பில் வந்திருந்தார்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இப்போது கதாநாயகியாக கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை நஸ்ரியாவுக்கும் மலையாளத்தை விடவும் தமிழில் எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர்.
மேட் டாட் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக மலையாளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டவர் நேரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
குழந்தைத்தனமான குணம் க்யூட்டான நடிப்பு என ரசிகர்களை முதல் படத்திலேயே கவர்ந்த நஸ்ரியாவுக்கு இன்று வரை எக்கச்சக்கமான ரசிகர்கள் இருந்து வரும் நிலையில் ராஜா ராணி, திருமணம் எனும் நிக்கா, நையாண்டி, வாயை மூடி பேசவும் என பல படங்களில் நடித்து வந்த இவர் நடிகர் ஃபகத் பாசில் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதில் இருந்து சற்று விலகி இருந்த இவர் 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கோடே என்ற திரைப்படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்து இப்பொழுது படங்களில் அடுத்தடுத்து கலக்கி வருகிறார்.
நடிப்பதில் மட்டும் அல்லாமல் திரைப்படங்களை தயாரித்து வரும் நஸ்ரியா மலையாளத்தில் சக்கை போடு போட்ட கும்பலங்கி நைட்ஸ் , சீ யூ சூன், வரதன் ஆகிய படங்களை தயாரித்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது தன்னுடைய இடுப்பு தெரியும்படியான கவர்ச்சி உடையில் சிக்கென இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், செஞ்சு வச்ச இடுப்பு.. சின்னஞ்சிறு மடிப்பு.. என்று பாடல் பாடி அம்மணியின் அழகை வர்ணித்து வருகிறார்கள்.