இவர் தான் நல்ல முதல்வர் வேட்பாளர் – கிழி கிழி என கிழித்த நடிகை கஸ்தூரி..! – தடுமாறிய கழகம்..!

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் 6ம்
தேதி நடக்கவிருக்கிறது. அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்கு
சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் புகைப்படத்தை
ஒருவர் ட்விட்டரில் வெளியிட்டு வெல்வோம் என்று தெரிவித்ததை பார்த்த
கஸ்தூரியோ அய்யோ வேணாம் என்றார். 

 

அதை
பார்த்த திமுகவினர் கஸ்தூரியை விளாசினார்கள். இந்நிலையில் யாருடைய
நம்பிக்கையையும் திமுக கொச்சைப்படுத்தாது. அவரவர் வழிபாடு, அவரவர் உரிமை,
கழக தலைவர் ஸ்டாலின் அவர்கள் உரை என்று அறிவாலயம் சார்பில் ட்வீட்
செய்யப்பட்டது. 

பெண்ணியம், சமூகம், அரசியல் கருத்துக்களை தனக்கே உரிய பாணியில், தடாலடியாக வெளிப்படுத்தி, பரபரப்பு நெருப்பை பற்ற வைப்பதில் கில்லாடி நடிகை கஸ்துாரி. ‘தற்போது, தனது சமூக வலைதள பக்கத்தில், முக்கியமான தொகுதிகளில், எந்த வேட்பாளருக்கு மக்கள் ஓட்டளிக்க வேண்டும் என்ற, தன் பரிந்துரையை பதிவிட்டு வருகிறார்.

 

EPS நல்ல முதல்வர் வேட்பாளர்

என் கண்ணிற்கு, இ.பி.எஸ்., நல்ல முதல்வராக தெரிகிறார். அவர் மட்டுமின்றி, அவரது அமைச்சரவையில் இடம் பெற்றிருப்பவர்களும், கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டனர். ‘டாஸ்மாக்’ விஷயத்தில், நான் வேறுபடுகிறேன். 

 

அ.தி.மு.க., அரசின் தவறுகளை சுட்டிக்காட்டிக்கொண்டு தான் இருக்கிறேன். விமர்சனங்கள் இருந்தாலும், இ.பி.எஸ்., நல்ல முதல்வர் என்பதில் மாற்றமில்லை.அதிகபட்சம் இரண்டு சீட் வெல்லும். 

 

ஆனால், தமிழகத்தில் பா.ஜ., வளர்ச்சி பெறுகிறது. அடுத்த லோக்சபா தேர்தலில் தமிழக மக்களின் கணிசமான ஆதரவை அக்கட்சி பெறும்.இவ்வாறு அவர் கூறினார். 

இந்து விரோத திமுக

யாருடைய
நம்பிக்கையையும் திமுக கொச்சைப்படுத்தாது. அவரவர் வழிபாடு, அவரவர் உரிமை என்று திமுக சார்பில் வெளியிட்ட ட்வீட்டை பார்த்த கஸ்தூரி, ஆமாம், இந்துக்களை வெறுப்பதில்லை. 

 

ஆனால் இந்து திருமணத்தை இஷ்டத்துக்கு இழிவுபடுத்துவோம் திருப்பதி ஏழுமலையானை ஏளனம் செய்வோம், மீனாக்ஷிக்கு மூக்குத்தி எதற்கு , ராமர் எஞ்சினீரா என்போம்! கந்தசஷ்டியை கலாய்ப்போம் .ராமாயணம் வேதங்கள் , தர்மசாத்திரங்கள் அனைத்தையும் பழிப்போம். #திருட்டுதிராவிடம் என்று கமெண்ட் போட்டு கிழி கிழி என கிழித்துள்ளார். 

 

கஸ்தூரியின் கமெண்ட்டை பார்த்த சமூக வலைதளவாசி ஒருவர், அது ஒரு பக்கம் இருக்கட்டும். உங்க வண்டவாலத்த சொல்லுங்க…eps பணம் பத்தும் செய்யும்… என்று கஸ்தூரியை சாடியுள்ளார்.

 

இதனை பார்த்த கஸ்தூரி நான் EPS /BJP கிட்ட பணம் வாங்கிக்கிட்டதா DMK உபிஸ் கூவறாங்க. ஏற்கனவே வாயை தொறந்தாலே பொய்தான் சொல்லுவாங்கங்கிற பழி உபிஸ் மேல இருக்கு. பாவம் ஒருமுறையாவது அவங்க சொல்லுறது உண்மையா ஆவட்டுமே ! கரும்பு தின்ன கூலி குடுத்தனுப்புங்க முதலமைச்சர் ஐயா ! ஹி ஹி
என்று பதிலளித்துள்ளார்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam