தெலுங்கு சினிமா மட்டுமின்றி தென்னிந்திய ரசிகர்களின் பேவரைட் லிஸ்டில் இணைந்திருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் படத்தின் மூலம் அறிமுகமானவர், விஜய் தேவர்கொண்டாவிற்கு ஜோடியாக நடித்தார்.
ஏற்கனவே அர்ஜுன் ரெட்டி மூலம் பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்ட விஜய் தேவர்கொண்டாவின் அடுத்த படத்தை எதிர்நோக்கி காத்திருந்த ரசிகர்கள், ராஷ்மிகாவை பார்த்தபின் அவருக்கு ரசிகர்களாக மாறினார்கள்.
அதன்பின் மீண்டும் இருவரும் டியர் காம்ரேட் படத்தில் ஜோடி சேர்ந்தார்கள். இருவருக்குள்ளும் கெமிஸ்ட்ரி அமோகமாக இருந்ததால் இந்த ஜோடியை மக்கள் ரசிக்க தொடங்கினார்கள்.
தெலுங்கு மட்டுமின்றி கன்னடத்திலும் நடித்து வருகிறார். ராஷ்மிகாவை எக்ஸ்பிரஷன் குயின் என்று வர்ணிக்க தொடங்கிவிட்டார்கள் அவரது ரசிகர்கள். தற்போது தமிழில் கார்த்திக்கிற்கு ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்து முடித்துள்ளார் ராஷ்மிகா மந்தனா.
இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் அம்மணி. பொதுவாகவே எப்பொழுதும் கவர்ச்சி காட்டாமல் அடக்க ஒடுக்கமாகவே ஆடை அணிந்து நடித்து வந்தார்.
ஆனால், தற்போது வெளியான ஒரு புகைப்படத்தில் தனது தொடையழகு அப்பட்டமான தெரியுமளவு கவர்ச்சி காட்டியுள்ளார். இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் ராஷ்மிகா-வா இது என அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.