“அப்போ புடிச்சுச்சு.. இப்போ புடிக்கல..” – வரம்பு மீறிய கவர்ச்சியில் கீர்த்தி ஷெட்டி – முகம் சுழிக்கும் ரசிகர்கள்..!

 

தெலுங்கு நடிகர் ராம் பொதினேனியை வைத்து ஒரு படம் இயக்குகிறார் லிங்குசாமி. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை RAPO19 என தற்காலிகமாக குறிப்பிட்டு வருகின்றனர். 

 

கடந்தவாரம் படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பமான நிலையில் இப்போது நாயகி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். மிகப்பெரும் பட்ஜெட்டில் பெரும் ஆளுமைமிக்க தொழில்நுட்ப கலைஞர்களுடன் மாஸ் ஆக்சன் படமாக தயாராகும் இப்படம் தமிழ், தெலுங்கில் வெளியாக உள்ளது. 

 

உப்பெனா படத்தில் வைஷ்ணவ் தேஜூக்கு ஜோடியாக நடித்திருந்தவர் கீர்த்தி ஷெட்டி.பிப்ரவரி 12-ம் தேதி வெளியான ‘உப்பெனா’ படத்தில் கீர்த்தி ஷெட்டியின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

 

தற்போது நானி நடிக்கும் ஷ்யாம் சிங்கா ராய், மற்றும் சுதீர் பாபுவுடன் ஒரு படம் என அடுத்தடுத்து பிஸியாகியுள்ளார் கீர்த்தி ஷெட்டி.இந்நிலையில் லிங்குசாமி – ராம் பொத்தினேனி படத்தில் கீர்த்தி ஷெட்டி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இந்நிலையில் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு நடிக்கும் புதிய படத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டி நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை பிரபல தெலுங்கு பட இயக்குனர் அனில் ரவிபுடி இயக்கவுள்ளார். 

 

கீர்த்தி ஷெட்டியின் நடிப்பு உப்பென்னா படத்தில் வியக்கத்தக்கதாக இருந்ததால் இந்த வாய்ப்பை மகேஷ்பாபு கொடுத்தாக கூறப்படுகிறது. குறுகிய காலத்தில் முன்ன்னணி நடிகர்கள் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் கீர்த்தி. 

 

இணையத்திலும், சுறுசுறுப்பாக வலம் வரும் இவர் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் ஒரு படத்தில் மிக மோசமான ரொமான்ஸ் காட்சிகளில் நடித்துள்ள அம்மணியை பார்த்த ரசிகர்கள் அப்போ புடிச்சுச்சு.. இப்போ புடிக்கல.. என்று மீம்களை பறக்க விட்டு வருகிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam