அசுரன் பட நடிகை மஞ்சு வாரியரா இது..? – நம்பவே முடியலையே..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

நடிகை மஞ்சு வாரியர் அவர்கள் மலையாளத்தில் தனது முதல் படமான சக்சயம் என்னும் படம் மூலம் மலையாள மொழியில் அறிமுகமாகினார்.

 

மலையாள சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்கிறார்கள், நடிகை மஞ்சு வாரியரை. நடிகர் திலீப்பை காதலித்து திருமணம் செய்துகொண்ட பின் நடிக்காமல் இருந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன் விவாகரத்து பெற்ற பிறகு மீண்டும் நடிக்கத் தொடங்கினார்.

 

15 வருடத்துக்கு பிறகு நடிக்க வந்த அவரது படங்கள் வரவேற்பைப் பெற்றன. அவரது கம்பேக் படமான, ஹவ் ஓட் ஆர் யூ? தமிழில், 36 வயதினிலே என்ற பெயரில் ஜோதிகா நடிப்பில் ரீமேக் ஆனது. 

 

இந்நிலையில், தமிழில் நடிக்க வேண்டும் என்ற அவரது ஆசை, அசுரன் மூலம் நிறைவேறியது.வெற்றிமாறன் இயக்கியிருந்த இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக அவர் நடித்திருந்தார். 

 

 

பச்சையம்மாள் என்ற அவர் கேரக்டர் இந்தப் படத்தில் பேசப்பட்டது. இதற்கிடையே அவர், மோகன்லாலின் மரைக்காயர் அரபிக்கடலின் என்ற படத்தில் நடித்துள்ளார். இதன் ரிலீஸ் கொரோனா காரணமாக தள்ளிப் போயிருக்கிறது. விரைவில் இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

 

இவரது அசுரன் படத்தில் நடிப்பதற்கு முன்னால் இவருக்கு தமிழில் 96படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.அனால் சில காரணங்களால் அவரால் நடிக்க முடியவில்லை.மேலும் இவர் தமிழில் இனிமேல் படங்கள் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பார என ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். 

இந்நிலையில், விழா ஒன்றில் பாவாடை, சட்டை அணிந்து கொண்டு பள்ளி மாணவி போல வந்திருந்த அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam