2017-இல் தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமானவர் ஜூலி. தமிழ் பெண், வீர தமிழச்சி என தமிழ் மக்கள் இவரை புகழ்ந்து பேசினர்.
இவர்கள் இப்படி உசுப்பேற்றி விட்டு, இவருடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மற்றவர்களுக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்துவந்த சூழலில், அம்மன் தாயி என்கிற ஒரு படம் கிடைத்தது அப்புறம் அதுவும் ரிலீஸாகாமல் போகவே, பிரபல தொலைக்காட்சி ஒன்றில் குழந்தைகள் ஆடும் ரியாலிட்டி ஷோ ஒன்றைத் தொகுத்து வழங்கி வந்தார்.
அதற்கு பிறகு அவ்வபோது எதாவது புகைப்படங்கள் வெளியிட்டு அதன் பின் மக்களிடம் திட்டு வாங்குவது ஜூலியின் பொழுது போக்காகிவிட்டது. பின்னர் அவர் டிவி சேனல் ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆனார்.
அதைத் தொடர்ந்து அவருக்குப் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சில படங்களில் நடித்தார். பொல்லாத உலகின் பயங்கர கேம் என்ற படத்தில் நடித்துள்ள ஜூலி, அம்மன் தாயி, நீட் தேர்வால் உயிரிழந்த அனிதாவின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட படங்களில் நடித்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஜூலியும் ஒருவர். அடிக்கடி எதையாவது ஷேர் செய்துகொண்டிருப்பார். அவரது டிக்டாக் வீடியோக்கள் அதிகமாக வைரலாகின.
சில நெட்டிசன்கள் அவரை கடுமையாகக் கலாய்ப்பதை வழக்கமாகச் செய்து வருகின்றனர். அதை நடிகை ஜூலி கண்டுகொள்வதில்லை.இந்நிலையில், கீழே எதையோ பார்த்து சுவைப்பது போல பாவனை செய்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், கீழே என்ன இருக்கு..? என்னடா நடக்குது அங்க..? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.