அதிமுக கூட்டணியை ஆதரித்து பிரச்சாரம் செய்ய திட்டமிட்டு அதற்கான ஆயத்தப்பணிகளில் ஈடுபட்டிருந்த அவருக்கு நேற்றிரவு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு பல்வேறு உடல்நல சோதனைகள் நடத்தப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அவருக்கு கொரோனா தொற்று இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.எனினும் தொடர்ந்து நடிகர் கார்த்திக்கிற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகர் கார்த்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அதிர்ச்சி புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
நடக்க கூட முடியாமல் வில் சேரில் செல்லும் கார்த்தியின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சற்றே சோகத்தில் உள்ளனர். மேலும், கார்த்தி விரைவில் நலம் பெற வேண்டி கருத்துகளையும் பதிவிட்டு வருகிறார்கள்.