தமிழில் கேடி படம் மூலம் அறிமுகமான இலியானா அதன் பின்னர் தெலுங்கு சினிமா உலகில் முன்னனி நடிகையாகி பின்னர் தமிழில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் – தளபதி விஜய் கூட்டணியில் உருவான நண்பன் படத்தில் நடித்து இருந்தார்.
அதன் பிறகு, ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல புகைப்பட கலைஞர் ஒருவருடன் காதலாகி லிவ்-இன்-டுகெதர் வாழக்கையை மேற்கொண்டார். இப்போது, காதல் முறிவு ஏற்பட்டு மீண்டும் சிங்கிளாகி விட்டார் அம்மணி. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.
பாலிவுட்டில் கொடிகட்டி பறக்க எண்ணி மும்பையில் செட்டில் ஆன இலியானாவுக்கு, அங்கு எதிர்ப்பார்த்த அளவிற்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஒல்லி பேயர்போன அவர் திடீரென உடல் எடை அதிகமானார்.
அதன்பிறகு தமிழ், தெலுங்கு, இந்தி என எதிலும் பட வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வருகிறார்.தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்டு வர தயாராகி வரும் அவர், அடிக்கடி ஹாட் ஃபோட்டோஷூட் நடத்தி சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.
அதிலும் பிகினி உடையில் அவர் பதிவேற்றும் புகைப்படங்களுக்கு லைக்குகள் குவியும். இடையில், ஆஸ்திரேலியாவை சேர்ந்த புகைப்பட கலைஞர் Andrew Kneebone-உடன் லிவ் இன் டுகேதர் வாழக்கை வாழ்ந்து வந்தார். அவர்கள் இருவருக்கும் ரகசியமாக திருமணம் நடைபெற்று முடிந்துவிட்டது என்றும் செய்திகள் பரவி வந்தது.
அப்போது, எங்களுக்கு திருமணம் தவிர எல்லாமே நடந்து விட்டது. குழந்தை பெற்றுக்கொள்வதை பற்றி மட்டும் நாங்கள் இன்னும் யோசிக்க வில்லை என்று வெளிப்படையாக பேசி ரசிகர்களை ஷாக் ஆக்கினார்.
ஆனால், யாரு கண்ணு பட்டதோ தெரியவில்லை, இருவருக்குள்ளும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். பிறகு, நீண்ட நாட்களாக இது குறித்து வாயே திறக்காமல் இருந்த இவர் காதலுடன் சேர்ந்து கொண்டு உடற்பயிற்சி செய்யாமல் உலகம் சுற்றியதால் பொசு பொசுவென ஏறிய உடல் எடையை குறைப்பதில் கவனம் செலுத்தி தற்போது மீண்டும் ஒல்லி பெல்லியாகி விட்டார்.
இந்நிலையில், நீங்க நாட்கள் கழித்து தற்போது காதல் தோல்வி குறித்து பேசியுள்ளார். அதில், காதல் தோல்விக்கு பிறகு தான் என்னுடைய உதடு எந்த தொந்தரவும் இல்லாமல் இருக்கின்றது என கூறியுள்ளார்.
இதை கேட்ட ரசிகர்கள் என்ன சொல்ல வராங்க என்று திகைத்து போனார்கள். தொடர்ந்து பேசிய அவர், காதல் தோல்விக்கு பிறகு பேசுவதை குறைத்து விட்டேன். அதனால், தான் அப்படி சொன்னேன் என்று கூறினார்.