தமிழ், தெலுங்கு என தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சமந்தா. ஆரம்பத்தில் சிறிய வேடத்தில் நடித்தாலும், கிடைத்த கதாபாத்திரங்களில் தனது தனி தன்மையினை வெளிப்படுத்தி பெயர் பெற்றவர் தான், சமந்தா.
தமிழில் “விண்ணை தாண்டி வருவாயோ” திரைப்படத்தில் மிக சிறிய கதாபாத்திரத்தில் நடித்து, பின், அந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாயகியாய் அறிமுகமாகி அசத்தினார். இந்த படத்திற்கு பின்பு தான் அனைவராலும் திரும்பி பார்க்கப்பட்டார்.
தமிழ் சினிமாவில் பாணா காத்தாடி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சமந்தா. பின்னர் விஜய், சூர்யா, விக்ரம் என பெரும்பாலான டாப் ஹீரோக்களின் படங்களில் நாயகியாக நடித்து ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றவர்.
சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்கிற புதிய படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில், 10 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். ஆனால் இனிமேல் கவர்ச்சியாக நடிக்காமல் நடிப்புத் திறமையை வெளியே கொண்டுவருவது போன்ற, நடிப்புக்கு மட்டும் முக்கியத்துவம் இருக்கும் கதாபாத்திரங்களில் நடிக்க முடிவெடுத்துள்ளேன் என கூறியுள்ளார்.
மேலும் சினிமாவில் பிஸியாக இருக்கும் இவர், விதவிதமான உடைகளை மாற்றியபடி பின்னழகை காட்டி ரசிகர்களை திணறடிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.