திருமணத்துக்கு பிறகும் ஜோதிகா, அமலாபால், மஞ்சுவாரியர் உள்ளிட்ட பல நடிகைகள் நடிக்க வந்துள்ளனர். அந்தவரிசையில் ‘தவமாய் தவமிருந்து’, ‘பட்டியல்’, ‘இரும்புகோட்டை முரட்டு சிங்கம்’ உட்ப பல படங்களில் நடித்த பத்மப்ரியாவும் தற்போது நடிக்க வந்திருக்கிறார்.
தெலுங்கில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான சீனு வசந்தி லட்சுமி என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் ,அதன் பின்னர் பல்வேறு மலையாள படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் இதுவரை தவமாய் தவமிருந்து, பட்டியல், சத்தம் போடாதே, மிருகம், பொக்கிஷம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் அறிமுகமான தவமாய் தவமிருந்து என்ற படத்திற்காக சிறந்த அறிமுக நடிகை என்ற ஃபிலிம்ஃபேர் விருதினையும் பெற்றுள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டு ஜாஸ்மின் ஷா என்பவரை மணந்து குடும்பத்தில் செட்டிலானார். 2 வருடமாக நடிப்பிலிருந்து விலகியிருந்தார். மீண்டும் அவருக்கு நடிக்கும் ஆசை வந்துவிட்டது. ஜெகபதி பாபு நடிக்கும் ‘பட்டேல் சார்’ படம் மூலம் ரீஎன்ட்ரி ஆனார் பத்மப்ரியா.
இதுபற்றி பத்மப்ரியா கூறும்போது, ‘ஜெகபதி பாபு ஜோடியாக நடிக்க கடந்த 15 ஆண்டுக்கு முன் எனக்கு வாய்ப்பு வந்தது. அது நடக்கவில்லை. தற்போது அந்த வாய்ப்பு அமைந்தது சந்தோஷம்.
நவநாகரீக பெண்ணாக இதில் நடிக்கிறேன். ஒரு நடிகையாக, நடிப்பு பசியுடன் நான் இருக்கிறேன். சினிமாவில் எந்தவிதமான வேடமாக இருந்தாலும் ஏற்று நடிப்பேன். இனி, நிறைய படங்களில் நடிக்க முடிவு செய்திருக்கிறேன்’’ என்றார்.
பத்மபிரியா கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் தேதி என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடைபெற்றது பத்மபிரியா நியூயார்க் பல்கலைக்கழகத்தில் முதுகலை படிக்கும் போது ஜாஸ்மினை சந்தித்தார்
பின்னர் ஒருவரை ஒருவர் பிடித்துப்போக திருமணம் செய்து கொண்டனர். சமீபத்தில் இவரது புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. திருமணத்திற்கு பின்னரும் படு இளமையாக இருக்கிறார் பத்ம பிரியா.
இந்நிலையில், கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.