“என் இரவை கடக்க இது போதும்..” – லிங்கா பட நடிகை வெளியிட்ட புகைப்படம் – டபுள் மீனிங்கில் கலாய்க்கும் ரசிகர்கள்..!

சோனாக்ஷி சின்ஹா, தமிழில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘லிங்கா’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒல்லியாக இருக்கும் பாலிவுட் நடிகைகள் மத்தியில் கொழுக் மொளுக் என இருந்ததால் சோனாக்ஷி சின்ஹா கடுமையான கிண்டல்களுக்கு உள்ளானார்.

 

சமூக வலை தளங்களில் நடிகைகள் அவர்களது உடலமைப்பு குறித்து தொடர்ந்து மோசமாக விமர்சிக்கப்படுகின்றனர். சில நடிகைகள் இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கின்றனர். சிலர் கண்டுகொள்ளாமல் கடந்து செல்கின்றனர். 

 

தற்போது நடிகை சோனாக்‌ஷி சின்ஹா தன் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார். சோனாக்‌ஷி குண்டாக இருப்பதாக தொடக்கத்தில் விமர்சனங்களை சந்தித்தவர். உங்களுக்குப் பிடித்தால் என்னைப் பாருங்கள். பிடிக்கவில்லை என்றால் பார்க்காதீர்கள். விமர்சனங்கள் என்னை மெருகேற்ற உதவுகின்றன. அவற்றை மகிழ்ச்சியுடன் படிக்கிறேன். 

 

ஆனால், வீட்டில் சண்டை போட்டு வந்த கோபத்தில் என் மீது விமர்சனங்களை முன்வைத்தாலோ, என்னை இல்லாமல் ஆக்க வேண்டும் என்று விமர்சனங்களை வைத்தாலோ ஏற்றுக்கொள்ள மாட்டேன். 

 

உங்களுக்கு ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால் பின் ஏன் அவரை சமூக வலைதளங்களில் பின் தொடர வேண்டும், கருத்துகளைப் பதிவிட வேண்டும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான லிங்கா படத்தில் சோனாக்‌ஷி கதாநாயகியாக நடித்திருந்தார்.இதுவே, இவருக்கு முதலும், கடைசி தமிழ் படமாக அமைந்து விட்டது.

 

சமீப காலமாக கடுமையாக உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்துள்ளார். கடுமையான டயட்டை மேற்கொண்டு வரும் இவர் கையில் வாழைப்பழத்தை வைத்துக்கொண்டு என்னுடைய இரவு உணவு இது மட்டும் தான்.

 

என்னுடைய இரவை கடக்க இது மட்டும் போதும் என கூறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இரட்டை அர்த்தத்தில் கமெண்ட் செய்து கலாய்த்து வருகிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam