விஜய் டிவியில் சூப்பர் ஹிட் அடித்து ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ குக் வித் கோமாளி. தற்போது இந்நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் நடைபெற்று வருகிறது.
இதில் கலந்து கொண்டுள்ள பவித்ரா லக்ஷ்மி, தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். இந்நிலையில் பவித்ரா லக்ஷ்மி சமீபத்தில் எடுத்துக்கொண்ட போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மலையாளத்தில் இளம் நடிகராக கலக்கி வரும் ஷேன் நிகம் என்பவருடன் இவர் “உல்லாசம்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இத்திரைப்படம் இந்த வருடம் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் பவித்ரா லக்ஷ்மி தான ஹீரோயினாக நடித்துள்ளார்.நிறைய இயக்குனர்கள் அவரை ஹீரோயினாக நடிக்க வைக்க வேண்டும் என்று ஆசை படுகிறார்கள் அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் இவருக்கு வரவேற்பு உள்ளது.
இந்நிலையில், கையில் கத்தரிக்கோல் வைத்து பட்டு புடவையை பாதியாக வெட்டி தொடை தெரியும்படி போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், ” உங்கள இந்த மாதிரி போட்டோ எடுத்தவனையும், உன்னையும் செருப்பால அடிக்கணும்” என்று கடுப்பு கமெண்டுகளை கூறி வருகிறார்கள்.
இதனை தொடர்ந்து, என்ன சிம்ரன் இதெல்லாம் என்று மீம்களை பறக்கவிட்டார்கள்.
கடும் எதிர்ப்பால் படத்தை நீக்கினார்
ஒரு கட்டத்தில் பட்டுப்புடவை வெட்டிக்கொண்டு போஸ் கொடுக்கும் நீங்கள் புர்காவையோ, Nunகள் அணியும் அங்கியையோ வெட்டிக்கொண்டு போஸ் கொடுப்பீர்களா என்று வசைபாட ஆரம்பித்து விட்டனர். விஷயம் விவகாரம் ஆவதை உணர்ந்து கொண்ட பவித்ரா உடனடியாக அந்த போட்டோக்களை டெலிட் செய்து விட்டார்.
இதன் காரணமாக அந்த புகைப்படங்களை நம்முடைய தளத்திலும் இணைக்கவில்லை.