நடிகர் அஜித்துடன் உன்னைத்தேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மாளவிகா. இவரது இயற்பெயர் ஸ்வேதா கொன்னூர் மேனன். உன்னைத தேடி படத்தினை தொடர்ந்து சில படங்களில் நடித்தவர் அதன் பின்னர் சில காலம் தமிழில் நடிக்காமல் இருந்தார்.
நீண்ட இடைவெளிக்கு பின் வாளமீனுக்கும் விலாங்குமீனுக்கும் கல்யாணம் என்ற பாடலுக்கு நடனம் ஆடியதால் மூலம் மீண்டும் படங்களில் மும்முரமானார்.
நடிகை மாளவிகா ரோஜா வனம், வெற்றி கொடி கட்டு, சந்திரமுகி, திருட்டு பயலே, குருவி, வியாபாரி, சபரி உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்துள்ளார்.இதைத்தொடர்ந்து மாளவிகா, சுமேஷ் என்பவரை 10 வருடத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
அதன் பிறகு சினிமாவை விட்டு விலகியிருந்தார்.தற்போது தனக்கு நடிக்க ஆர்வம் ஏற்பட்டுள்ளதாக மாளவிகா தெரிவித்துள்ளார் . சமூகவலைதளங்களில் தன்னுடைய புகைப்படங்களை பதிவு செய்ததை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில், மாளவிகா துணி வாங்குவதற்காக ஒரு கடைக்கு சென்று இருக்கிறார் அங்கு தனக்கு பிடித்த உடைகளை எடுத்துக் கொண்டு ஒரு ட்ரையல் ரூமிற்கு சென்று தொப்பை தெரியும் அளவுக்கு செல்பி எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
இப்படி ட்ரான்ஸ்ப்ரண்டான புடவை அணிந்து அதனை செல்பி வெளியிடலாமா என்று கேள்வி கேட்டு வருகிறார்கள் இணையவாசிகள்.