வெளியான ஒரே மணி நேரத்தில் 1 மில்லியன் வியூவ்ஸ் – வைரலாகும் சாய்பல்லவியின் வீடியோ..!

சாய் பல்லவி நடித்து வரும் தெலுங்கு படமான ‘லவ் ஸ்டோரி’ படத்தில் இருந்து இன்று வெளியான ‘சாரங்க டரியா’ பாடல் வெளியான நிலையில், இதை பார்த்து, நடிகை சமந்தா சாய்பல்லவியை ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.

 

நடிகைகள் சிலர் பத்து படங்களில் நடித்தாலும் கூட சொல்லிக் கொள்வது போல் ஒரு கேரக்டரோ, பாடலோ கிடைக்காது. ஆனால் சில நடிகைகள் ஒரே படத்தில் தேசிய புகழ் அடைவார்கள்.

 

ஆனால் நடிகை சாய் பல்லவியோ இவை அத்தனையையும் தூக்கி சாப்பிட்டவர். தாறுமாறான நடன திறமை, பாந்தமான அழகு, நீட் நடிப்புத்திறமை இவை அனைத்தும் கலந்த ஒரு கலவைதான் சாய் பல்லவி. ஆரம்பத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்ற தன் மூலம் தான் சாய் பல்லவியின் அறிமுகம் அமைந்தது. 

 

சில வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் கன்னாபின்னா ஹிட்டடித்த ‘பிரேமம்’ படத்தின் ‘மலர் டீச்சர்’ பாத்திரத்தால் மலையளவு ஹிட்டடித்தார். அந்தப் படம் அவரை தென்னிந்தியா முழுக்க அடையாளப்படுத்தியது. 

 

தற்போது தெலுங்கு படங்களில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். அங்கும் சாய் பல்லவி நடிப்பில் அடுத்தடுத்து வெளியான படங்கள் ஹிட்டடிக்க தெலுங்கு வாலாக்களின் மனதையும் கவர்ந்துவிட்டார். 

 

 

இந்நிலையில், இவர் தற்போது நடித்துள்ள “லவ் ஸ்டோரி” என்ற படத்தில் இடம் பெற்றுள்ள சாரங்க டரியா என்ற பாடல் வெளியாகியுள்ளது. பாடல் வெளியான ஒரே மணி நேரத்தில் 1 மில்லியன் வியூவ்ஸ்களை தாண்டி ஹிட் அடித்துள்ளது இந்த பாடல்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam