விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “சரவணன் மீனாட்சி” சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை காயத்ரி யுவராஜ். இவர் 1990 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.இவருக்கு டேன்ஸ் மீது உள்ள ஆர்வத்தால் டேன்ஸ் பயிற்சி பெற்று ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று வந்தார்.
இந்நிலையில் 2009 ஆம் ஆண்டு ‘‘தென்றல்’’ சீரியல் மூலம் அறிமுகமானார். அந்த சீரியலில் நிலா என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இதுவே இவரின் முதல் சீரியல். பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அந்த சீரியலில் இவர் நடித்த முத்தழகு கதாபாத்திரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.இவர் சீரியல்களில் மட்டுமல்லாமல் என்டர்டெயின்மெண்ட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார் நடிகை காயத்ரி.
தற்போது அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “அரண்மனை கிளி” சீரியலில் நடித்திருந்தார். இவர் ஒரு சிறந்த டான்ஸர் என்பதால் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
இவர் “டான்ஸ் ஜோடி டான்ஸ்”, “ஜோடி நம்பர்- 1” ஜோடி சீசன்-9, “மிஸ்டர் மற்றும் மிசஸ் கில்லாடீஸ்” போன்ற டான்ஸ் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். இவர் யுவராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
யுவராஜ் விஜய் தொலைக்காட்சியில் டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். தற்போது இவர் “சித்தி-2” சீரியலில் வில்லி கதாபாத்திரத்திலும் “நாம் இருவர் நமக்கு இருவர்” சீரியலில் அமைதியான பெண் கதாபாத்திரத்திலும் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
காயத்ரி சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.இவர் தற்போது ஸ்லீவ்லெஸ் உடையில் ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.