“நோக்கேதா தூரத்து கண்ணும் நட்டு” என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை நதியா தமிழுக்கு பூவே பூச்சூடவா படத்தின் மூலம் முதல் முறையாக அறிமுகமானார்.
பூவே பூச்சூடவா இவரது முதல் படமான ” நோக்கேதா தூரத்து கண்ணும் நட்டு” ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு மொழிகளிலும் படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. முதல் படத்திலேயே ரசிகர்களின் கனவு கன்னியாக நதியா மாறினார்.
இதை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என வாய்ப்புகள் குவிய அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த இவர் தமிழில் முன்னணி நடிகர்களாக உள்ள ரஜினிகாந்த், பிரபு, சத்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருந்தாலும் நடிகர் சுரேஷுடன் இணைந்து நடிக்கும் படங்கள் ரசிகர்களிடம் தனி கவனத்தை பெற்றது.
மேலும் 90களில் சுரேஷ், நதியா ஜோடிக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்தது. பூக்களை பறிக்காதீர்கள், உயிரே உனக்காக, சின்ன மேடம்,ராஜகுமாரன், சின்னத்தம்பி பெரியதம்பி,ராஜாதி ராஜா, நிலவே மலரே, பூ மழை பொழியுது, உனக்காக வாழ்கிறேன் என எண்ணற்ற ஹிட் படங்களில் நடித்திருந்த நதியா கவர்ச்சி காட்டாமலும் முன்னணி நடிகையாக வலம் வரலாம் என்பதை நிரூபித்து காட்டியவர்.
இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகளாக நடிப்புக்கு முழுக்கு போட்டிருந்த இவர் மீண்டும் எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்து தமிழ் மற்றும் தெலுங்கில் அடுத்தடுத்து படங்களில் நடித்து இரண்டாம் இன்னிங்சை தொடங்கினார்.
90களில் பார்த்ததை போலவே அதே இளமையுடன் இன்றும் இருக்கும் நதியாவின் அழகின் ரகசியம் என்ன என்பதை பலரும் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்க இளம் கதாநாயகிகளுக்கு டஃப் கொடுக்கின்ற அளவுக்கு இன்றும் இளமையுடன் இருக்கும் நதியா ஹீரோயினாகவே நடிக்கலாம் என பல ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
இந்தநிலையில் 2009ஆம் ஆண்டு வெளியான பட்டாளம் படத்திற்கு பிறகு வேறு எந்த தமிழ் திரைப்படங்களில் கமிட் ஆகாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் மட்டும் நடித்து விருதுகளையும் குவித்து வந்த நதியா
இப்பொழுது 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழில் நடிக்க உள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகும் இந்த படத்தில் நடிகை நதியா முக்கியமான வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நீண்டகாலமாக படங்களில் நதியாவை பார்க்க முடியாத ஏக்கத்தில் இருக்கும் ரசிகர்கள் இந்த தகவலை அறிந்ததும் செம குஷியில் இருக்க விரைவில் இதைப்பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் அதீத கவனம் செலுத்தி வரும் இவர் அடிக்கடி உடற்பயிர்ச்சி மற்றும் யோகா ஆகியவற்றை செய்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது யோகா செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இந்த வயதிலும் இப்படியா..? என வாயை பிளந்து வருகிறார்கள்.