`சீரியலில் நடிக்கும் நடிகைகளுக்கு, சினிமா நடிகைகளைப் போலவே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் லட்சுமி ஸ்டோர்ஸ் நக்ஷத்ராவையும் குறிப்பிடலாம்.
முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வானவில் என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் நக்ஷத்ரா, அதன் பிறகு பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். அதோடு சினிமா விழாக்கள், சின்னத்திரை நிகழ்ச்சிகள் என அனைத்தையும் தொகுத்து வழங்கினார்.
கூடவே நட்சத்திர நாகேஷ் அவர்கள் சேட்டை, வாயை மூடி பேசவும், மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். வாணி ராணி சீரியல் மூலம் சீரியலில் நடிக்க ஆரம்பித்தவர், நக்ஷத்ரா நாகேஷ் 1992 செப்டம்பர் 11 ஆம் தேதி நாகேஷ் மற்றும் நளினி ஆகியோருக்கு சென்னையில் பிறந்தார்.
செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் பயின்ற அவர், ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி மற்றும் அப்ளைடு நியூட்ரிஷனில் இளங்கலை பட்டம் பெற்றவர். இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வர, சன் டிவியின் நிகழ்ச்சித்தொகுப்பாளர் பணியிலிருந்து விலகி இருந்தார்.
சினிமா நடிகைகளை விட தற்போது சீரியல் நடிகைகள் தான் இல்லத்தரசிகள் மனதில் மிகவும் எளிதாக இடம்பிடித்துவிடுகின்றனர். அந்த வகையில் தொகுப்பாளினியாக ஆரம்பத்தில் அறிமுகமாகி பின்னர் பஞ்சுமிட்டாய் என்ற கதாபாத்திரத்தின் மூலம் இல்லத் தரசிகள் மனதை கொள்ளைகொண்டவர் நடிகை நக்சத்ரா நாகேஷ்.
சமீபத்தில் தனது வருங்கால கணவருடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்பகிர்ந்து இருந்தார். இதற்கு பல்வேறு பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர்.
இப்படி ஒரு நிலையில் தனது வருங்கால கணவர் குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். நக்ஷத்ரா திருமணம் செய்துகொள்ளப்போகும் ராகுல், அவரின் பள்ளி சீனியராம்.
இந்நிலையில், சமீப காலமாக தனது கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார் அம்மணி. அந்த வகையில், முட்டிக்கு மேல் எரிய கவர்ச்சி உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சீரியலில் குடும்ப குத்து விளக்காக தோன்றும் நக்ஷத்ரா-வா இது என்று வாயை பிளந்து வருகிறார்கள்.