நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேயாத மான் படம் மூலம் கவனம் ஈர்த்த இந்துஜா தொடர்ந்து குடும்ப பாங்கான திரைப்படங்களிலேயே நடித்து வருகிறார்.
விஜய் நடித்து வரும் பிகில் திரைப்படத்தில் அவர் அவரது குழுவில் இருக்கும் விளையாட்டு வீராங்கனைகளில் ஒருவராக நடித்துள்ளார்.இவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
இதுவரை குடும்ப கதாபாத்திரங்களிலும், கவர்ச்சி இல்லாத புகைப்படங்களையும் மட்டுமே பகிர்ந்து வந்த இந்துஜா சமீபகாலமாக இலை மறை காய் மறைவாக பல்வேறு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
தமிழ் சினிமாவில் தமிழ் நன்கு பேசத்தெரிந்த நடிகைகள் வெகுசிலரே இருந்துவரும் நிலையில், வேலூரை பூர்வீகமாக கொண்ட தமிழ் நடிகை இந்துஜா இப்பொழுது பல்வேறு திரைப்படங்களிலும் வெப் சீரிஸ்களிலும் நடித்து கலக்கிக் கொண்டு வருகிறார்.
மேயாத மான் திரைப்படம் கொடுத்த அறிமுகத்தை தொடர்ந்து பல்வேறு தனித்துவமான கதைக் களங்களை கொண்ட மெர்குரி, 60 வயது மாநிறம், பூமராங், மகாமுனி திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்த இந்துஜா சென்ற ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் கால் பந்தாட்ட வீரராக நடித்ததில் இந்திய அளவில் பல்வேறு மக்களுக்கும் பரிச்சயம் ஆனார்.
அப்படி அவர் சமீபத்தில் முழு தொடையும் தெரிய வெளியிட்ட சில புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள் ‘ என்ன சிம்ரன் இதெல்லாம்?’ இப்படி கவர்ச்சி காட்டலாமா? எனவும் கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.