ஏரி உடைந்தால் மீன் ஏரியாவுக்கு வந்துதானே ஆகவேண்டும் என்ற டயலாக் யாருக்கு பொருந்துகிறதோ, இல்லையோ. அனுபமா பரமேஸ்வரனுக்கு பக்காவாக பொருந்தியுள்ளது. அதற்கு காரணம் அவருடைய சமீபத்திய தொப்புள் பஞ்சாயத்து தான்.
பிரேமம் படத்தின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி தற்போது தெலுங்கு சினிமாவில் கவனிக்கப்படும் நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் அனுபமா பரமேஸ்வரன்.
தமிழிலும் இவர் பரிட்சியம் தான். தற்போது தெலுங்கு சினிமாவில் உள்ள இரண்டாம் கட்ட நடிகர்களில் படங்களில் முதன்மை சாய்ஸ்சாக இருப்பது அனுபமா பரமேஸ்வரன் தான்.
முதலில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன் என பேசியவர் தற்போது அதிலிருந்து கொஞ்சம் மாறி விட்டாராம். முன்னர் இருந்ததை விட தற்போது அனுபமா பரமேஸ்வரன் தான் நடிக்கும் படங்களில் அவ்வப்போது சில கிளாமர் காட்சிகளிலும் நெருக்கமாக ரொமான்ஸ் காட்சிகளிலும் நடித்து ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறாராம்.
ப்ரேமம் படத்தின் மூலம் திரை உலகில் கால் பதித்த அனுபமா பரமேஸ்வரன் அந்த படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து தெலுங்கு திரை உலகிலும் நுழைந்தார்.
த்ரிவிக்ரம் இயக்கத்தில் அ ஆ படத்தின் மூலம் ஒரு சிறிய வேடத்தில் அறிமுகம் ஆனவர் அதன் பின்னர் ப்ரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் மலையாளத்தில் செய்த அதே வேடத்தை செய்தார்.
இதன் பின்னர் நடித்த சாதமானம் பார்வதி படமும் சிறப்பாக ஓடியதால் இவரது கேரியர் உச்சத்துக்கு வந்தது. ஆனால் இந்த படத்தை அடுத்து இவர் நடித்து வெளிவந்த படங்களான உண்ணத்தி ஒக்கடே சிந்தகி மற்றும் க்ரிஷ்ணார்ஜுன யுத்தம் ஆகிய இரண்டு படங்களும் படு தோல்வி அடைந்தன.
இப்பொழுது அடுத்ததாக இவர் நடிப்பில் வெளியாக இருக்கும் தேஜ் படத்தை தான் பெரிதாக நம்பி உள்ளார். சமீபத்தில் ஒரு பேட்டியில் இவரிடம் நீங்கள் ஏன் கவர்ச்சியாக நடிப்பதில்லை என்று கேட்கப்பட்டது.
படத்திற்கு தேவை என்றால் கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை என்றார் அம்மணி. அதற்கேற்றார் போல சிகப்பு நிற உடையில் சூடான முக பாவனைகளை வெளிப்படுத்தி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.
இதனை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பான கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள்.