தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்தார்.
சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்துள்ளனர்.பின்பு, அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஏழாம் வகுப்பு ‘c’ பிரிவு அதாவது ‘7 சி’ என்ற சீரியலில் கேபி என்னும் கதாபாத்திரத்தில் நடித்தார்.
பிக்பாஸ் சீசன் 4 -ல் கலந்து கொண்டு ரசிகர்களின் மனதில் இடம்பெற்றார். யாருக்கும் அவர் மீது எந்தவிதமான வெறுப்பு ஏற்படாத அளவிற்கு தனது கேமை ஆடினார்.
ஆனால் 100 நாட்கள் முடிந்த பின்னர், எதிர்பாராத நேரத்தில் ரூ.5 லட்சம் பெட்டியை எடுத்துக்கொண்டு நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.100 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் தங்கியிருந்த கேபி இறுதிச்சுற்றுக்கான டாஸ்க்குகளில் கடுமையாக போராடினார்.
மேலும் குரூப்பாக சேர்ந்து கொண்டு விளையாடுவதாக கேபி மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்ட போது அதையும் உடைத்துக் காட்டி தனது தனித்துவத்தை நிரூபித்திருந்தார். இந்நிலையில் தற்போது அவர் பணப்பெட்டியுடன் வெளியேறியிருப்பதும் சிறப்பான உத்திதான் என்றனர் பிக்பாஸ் பார்வையாளர்கள்.
வழக்கம் போல பிக்பாஸ் பிரபலங்கள் பலரும்விஜய் தொலைகாட்சிகளில் ஒளிபரப்பாகும் மற்ற நிகழ்சிகளில் கலந்து கொள்வது வழக்கம். அந்த வகையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் இறுக்கமான பிங்க் நிற உடையில்செம்ம ஹாட்டாக வந்திருந்தார்.
அப்போது எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை எக்குதப்பாக வர்ணித்துவருகிறார்கள்.