“என்ன.. ரெண்டும் ஒரே மாதிரி இருக்கு..” – நயன், நிவேதா-வை பார்த்து குழம்பி போன ரசிகர்கள்..! – வைரல் மீம்ஸ்..!

 

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாராவின் நடிப்பில் கடைசியாக வெளியான படம் மூக்குத்தி அம்மன். ஓடிடி தளத்தில் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 14-ம் தேதி வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

 

இதையடுத்து தற்போது ரஜினிகாந்த் உடன் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வரும் நயன்தாரா அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் விஜய் சேதுபதியுடன் நடிக்க இருக்கிறார். 

 

மறு பக்கம் நடிகை நிவேதா பெத்துராஜ் சமீப காலமாக கவர்ச்சிக்கு போட்டு வைத்திருந்த கதவை திறந்து விட்டுள்ளார். இதனால், தமிழ்,தெலுங்கு என எக்கச்சக்கமான வாய்ப்புகள் குவிந்து வருகிறது. 

 

அல்லு அர்ஜுன் நடிப்பில் சென்ற ஆண்டு வெளியாகி வசூல் சாதனை புரிந்த அலா வைகுண்டபுரம்லோ படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்து கலக்கி இருந்தார்.

 

 

ஹீரோயினாக மட்டுமல்லாமல் குணசித்திர கதாபாத்திரங்களில் நடிக்கும் நிவேதா பெத்துராஜ் முன்னணி நடிகர்கள் இளம் நடிகர்கள் என எந்த ஒரு பாகுபாடும் பார்க்காமல் கதையை மட்டும் தேர்ந்தெடுத்து அதில் தனது கதாபாத்திரத்தை பார்த்து மட்டுமே நடித்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். 

இந்நிலையில், நயன்தாரா.. நிவேதா பெத்துராஜ் இருவரும் ஒரே மாதிரியான உடையில் இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இது என்ன ரெண்டும் ஒரே மாதிரி இருக்கு என்று குழம்பி வருகின்றனர்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam