“திரிஷா போல என்னால் அதை பண்ண முடியாது..” – ஸ்ட்ரிக்ட் காட்டும் கீர்த்தி சுரேஷ்..!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். மகாநடி திரைப்படம் மூலமாக ஒட்டுமொத்த திரையுலகையும் ஆச்சர்யப்பட வைத்தார். 

 

மகாநடி படத்தில் சாவித்ரியாகவே வாழ்ந்த கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது கிடைத்தது. இதையடுத்து ராக்கெட் வேகத்தில் மார்க்கெட்டும் எகிறியது. 

 

ஆனாலும் சற்றும் நிலை தடுமாறாத கீர்த்தி சுரேஷ் சரியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் பெண்குயின், மிஸ் இந்தியா போன்ற ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் கவனம் செலுத்தி வருகிறார். 

 

தற்போது கொரோனா லாக்டவுனுக்கு பிறகு அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்றுள்ள கீர்த்தி சுரேஷ், தற்போது உடல் எடையையும் கணிசமாக குறைத்து ஸ்லிம் லுக்கில் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். 

 

சோசியல் மீடியா குயினாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் புகைப்படங்கள் எது வெளியானாலும் அது செம்ம விரலாக மாறிவிடுகிறது. நடிகைகள் என்றாலே இரண்டு வருடம், மூன்று வருடம் தான் அதன் பிறகு காணாமல் போய்விடுவார்கள்.

 

சினிமாவில் நீண்ட காலம் நிலைத்திருக்கும் நடிகைகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பெரிய இவரிடம் திரிஷாவை பின் பற்றி சினிமாவில் நீண்ட காலம் நிலைத்திருப்பேன் என்று கூறியுள்ளார். 

 

அதனை தொடர்ந்து,அப்படியென்றால் திரிஷா போல கவர்ச்சி காட்டவும் தயாராக இருக்கிறீர்களா..? என்று கேட்டதற்கு, திரிஷா போல கிளாமராகவும், அங்கங்கள் தெரியும் படியும் என்னால் நடிக்க முடியாது என்று ஒரே போடாக போட்டுள்ளார்.

 

முன்னணி நடிகைகள் மார்கெட் சரியும் போதெல்லாம் கிளாமரை ஒரு ஆயுதமாக உபயோகப்படுத்தி அடுத்த ரவுண்டுக்கு தயாராவார்கள். இபப்டித்தான் சினிமாவில் நீண்ட காலம் வண்டியை ஓட்டுவார்கள். ஆனால், கீர்த்தி சுரேஷ் கவர்ச்சிக்கு நோ என்று ஸ்ட்ரிக்ட் காட்டுகிறார். இவருடைய சினிமா எதிர்காலம் எப்படி இருக்கும் என பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam