தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி – 1 கப் பட்டாணி – 1/2 கப் வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது) கெட்டியான தேங்காய் பால் – 1 கப் தண்ணீர் – 1/2 கப் உப்பு – தேவையான அளவு .

விருப்பம் உள்ளவர்கள் கேரட் மற்றும் பீன்ஸ் சிறிதளவு நருக்கி எடுத்து கொள்ளலாம்

அரைப்பதற்கு:

புதினா – 1/2 கப் கரம் மசாலா – 1/2 டீஸ்பூன் பச்சை மிளகாய் – 3 வரமிளகாய் – 2 துருவிய தேங்காய் – 3 டேபிள் ஸ்பூன் இஞ்சி – 1/2 இன்ச் பூண்டு – 4 பற்கள்

தாளிப்பதற்கு:

நெய் – 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் – 1 டீஸ்பூன் பிரியாணி இலை – 1 பட்டை – 1/4 இன்ச் கிராம்பு – 2 ஏலக்காய் – 1

 

பேச்சுலர்கள் வேலை பளு மிகுந்த நாட்களில் எளிதாக , குறைந்த நேரத்தில் , குறைவான மூலப்பொருள் கொண்டு செய்து முடிக்க கூடிய , அனைவரும் விரும்பி உண்ணும் பிரியாணி வகை உணவை சமைக்கும் முறை இந்த பதிவில் பார்ப்போம்

செய்முறை:

முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பாசுமதி அரிசியை நன்கு சில முறை நீரில் கழுவி , சுத்தமான நீரில் 15 நிமிடம் ஊற வைத்து,தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் ஒரு அடி கனமான குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்த பிறகு, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்கவும், பின் அதில் பொடியாக நருக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும், பின் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்துக்கொள்ளவும், பச்சை வாசனை போக நன்கு கிளறி விட வேண்டும். பின்பு அதில் பட்டாணி, (விருப்பம் உள்ளவர்கள் நறுக்கிய கேரட் பீன்ஸ் சேர்த்து கொள்ளலாம்) தேவையான அளவு உப்பு மற்றும் பாசுமதி அரிசி சேர்த்து கிளறி, தேங்காய் பால் மற்றும் தண்ணீர் ஊற்றி, மீண்டும் கிளறி, தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும் போது, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரை திறந்தால், தேங்காய் பால் பட்டாணி பிரியாணி ரெடி!!!

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …