வலிகளுக்கு நிவாரணம் தரும் மூலிகைகள்.

இன்று உள்ள சூழ்நிலையில் வலி என்பது எல்லோருக்குமே ஏற்படக்கூடிய ஒரு விஷயமாகத்தான் இருக்கிறது அது மட்டுமில்லாமல் தினமும் அவர்கள் செய்யும் வேலையைப் பொறுத்து உடல்வலி ஏற்படுவதை இயற்கையாகவே அமைந்து விட்டது இந்த வழியினை மருந்து மாத்திரை எடுத்துக் கொள்ளாமல் இயற்கை முறையில் எவ்வாறு சரி செய்வது என்பதைப் பற்றி இக்கட்டுரையில் இனி பார்க்கலாம்.

வலி நீங்கும் மூலிகைகள்:

உடல் வலியில் இருந்து விடுதலை பெற வேண்டும் எனில் நொச்சி இலை, தும்பையிலை, குப்பைமேனி, ஆடாதோடா, நாயுடுவுக்கு இவற்றை எல்லாம் தண்ணீரில் நன்கு கொதிக்கவைத்து காலை, மதியம், இரவு முறையை ஆவி பிடித்தால் உடல்வலி இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும்.

பெண்களையும், நடுத்தர வயது ஆண்களையும் பாடாய்படுத்துகிறது மூட்டு வலியில் இருந்து நிவாரணம் பெற வேண்டுமானால் இதே நொச்சி இலை, தும்பை, குப்பை மேனி, ஆடா தோடா இலை இவற்றை கொதிக்க வைத்து அந்த நீரை இரவு உறங்குவதற்கு முன்பு முழங்காலில் தொடர்ந்து ஒத்தடம் கொடுத்து வந்தால் மூட்டு வலி குறைந்துவிடும்.

வாதநாராயணன் இலையை சூடத்தோடு, மிளகையும் சேர்த்து நல்லெண்ணையுடன் சூடாக்கி மிதமான சூட்டில்  மூட்டுகளில் ஒத்தடம் கொடுத்து பின் எண்ணெயைத் தேய்த்து வர மூட்டு வலி மிக விரைவில் குணமாகும்.

வேப்பிலை, அத்தி இலை, அருகு, வில்வம், கீழாநெல்லி, முடக்கத்தான் இலைகளை பொடி செய்து வெந்நீரில் காலை, மாலை இருவேளை குடித்து வர அனைத்து வகையான உடல் வலிகளும் எளிதில் நீங்கும்.

முடக்கு நோய்க்கு முடக்கத்தான் இலைகளும், வாத நோய்க்கு வாதநாராயணன் இலைகளும் அருமருந்தாக பயன்படுகிறது.

தலைவலி குணமாக மகிழம்பூவை தினமும் உண்டு வர வேண்டும் இல்லையென்றால் நீ இந்தப் பூவை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்து வர தலைவலி குணமாகும் அதேபோல் தும்பை பூவை நல்லெண்ணெய் விட்டு வதக்கி தலையில் தேய்த்து வந்தாலும் தலைவலி குணமாகும்.

தலைவலி அதிகளவு இருக்கும் பட்சத்தில் சுக்கு 10 வெற்றிலை 10 சாம்பராணி பற்றுப்போட தலைவலி வந்த சுவடே உங்களுக்கு தெரியாது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …