மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கொண்ட மாருதி எர்டிகா.

இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் கார் வாங்க வேண்டும் என்ற கனவு இயற்கையாகவே வந்துள்ளது. காரை வாங்குவதற்கு முழு பணத்தையும் கட்டி வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லாத காரணத்தினால் எல்லா தரப்பு மக்களும் இஎம்ஐ மூலம் மிக எளிதில் கார்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் இன்று சந்தையில் நிறைந்துள்ளது. அவ்வாறு வாங்க நினைக்கும் மனிதர்கள் எந்த காரை வாங்க வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வமும், அக்கறையும் கொண்டுள்ளனர். அவர்களின் எண்ணங்களுக்கு மதிப்பு அளிக்கும் வகையில் இன்று மாருதி கம்பெனியால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த கார் நிச்சயம் அனைவரும் விரும்பும் வகையில் பட்ஜெட்டுக்குள் இருக்கும் என்பதில் எந்த வகையான சந்தேகமும் இல்லை. இனி அந்த  காரின் சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதை பற்றி பார்க்கலாம்.

காரின் புதிய பெட்ரோல் எஞ்சின் சிறப்பான செயல்திறனை கொண்டு விளங்குவதோடு மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கொண்டுள்ளது. இதுவே சிஎன்ஜி எரிபொருள் தேர்விலும் கிடைக்கிறது.சிறந்த 7 சீட்டர் கார்.

இந்த எஞ்சின் அதிகபட்சமாக 103 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனை கொண்டதோடு 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மாருதி எர்டிகா காரானது 45 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் கலன் உள்ளது. பெட்ரோல் மாடலின் மேனுவல் கியர்பாக்ஸ் மாடல் லிட்டருக்கு 19.34 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் மாடல் லிட்டருக்கு 18.64 கிமீ மைலேஜையும் தரும். இதன் சிஎன்ஜி மாடல் கணக்குப்படி 26.2 கிமீ மைலேஜையும் தரும்.

எர்டிகா காரில் 6.8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. இது ஆப்பிள் கார் ப்ளே, ஆன்ட்ராய்டு ஆாட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும்.மேலும் இந்த காரில் டியூவல் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, சீட் பெல்ட் ரிமைன்டர், ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்டுகள் உள்ளது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …