பயன்மிகு சமையல் குறிப்புகள்

சமையலறையில் நாம் வைத்திருக்கக்கூடிய ரவை கோதுமை போன்ற பொருட்களில் பூச்சி புழு ஏதும் வராமல் இருப்பதற்காக சிறிதளவு வசம்பை தட்டி அதில் போடலாம். அதேபோல் வரமிளகாயை போட்டு வைப்பதால் பூச்சி கூடு கட்டுவது தவிர்க்கப்படும்.

இட்லிக்கு அரைத்து வைத்திருக்கக்கூடிய மாவு புளித்துப் போகாமல் இருக்க வெற்றிலையை அதில் போட்டு வைத்தால் போதும்.

சமையல் செய்யும்போது வெங்காயம் நன்றாக வதங்க சிறிதளவு உப்பு போட்டு வதக்கினால் போதுமானது எந்த பொருளிலும் சிறிதளவு மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்வதால் கிருமிகள் கொல்லப்படும்.

பச்சை மிளகாயை பிரிட்ஜில் வைக்கும் போது காம்புகளை நீக்கி வைத்துவிட்டு வைத்தால் சீக்கிரம் பழுக்காது. அதேபோல் பாகற்காயை இரண்டாக வெட்டி வைத்தால்  பழுக்காமல் இருக்கும்.

தோசைக்கல்லில் தோசை ஊற்றும்போது சரியாக வரவில்லை என்றால் ஒரு துணியில் புளியை நன்கு முடிந்து தோசை கல்லில் தீத்தி பின் தோசை வார்த்தால் தோசை மிகவும் நன்றாக வரும்.

இஞ்சி கெட்டுப்போகாமல் அப்படியே இருக்க வேண்டும் என்றால் சிறிதளவு மணலில் நீர் சேர்த்து அதனுள் புதைத்து வைத்துவிட்டால் போதும். அதே போல் பீட்ரூட், கேரட்டையும் இதேபோல் செய்தால் வாடாமல் இன்று வாங்கிய கேரட், பீட்ரூட் போலவே இருக்கும்.

தேங்காய் மூடியை பிரிச்சில் வைக்கும்போது கெட்டுவிடாமல் இருப்பதற்காக அதன் மேல் சிறிதளவு உப்பை தடவி வைத்தால் போதும். பூஞ்சைகள் ஏதும் படாமல் புளித்த நாற்றம் ஏற்படாமல் இருக்கும்.

ரசப்பொடி தீர்ந்து போனால் கவலைப்படாதீர்கள். துவரம்பருப்பு ஒரு ஸ்பூன் மிளகு, சீரகம் மூன்றையும் ஒன்றாக மிக்ஸியில் அடித்து ரசம் வைத்து பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும்.

சர்க்கரையில் எறும்புகள் வராமல் இருக்க ஒன்று இரண்டு கிராம்புகளை போட்டு வைத்தால் போதுமானது எரறும்பு தொல்லை ஏற்படாது.

அடைக்கு ஊறவைக்கும் அரிசி, பருப்புடன் சிறிது கொண்டைக் கடலையையும் ஊறவைத்து, அரைத்து அடை செய்தால் ருசியாக இருக்கும்.

உடலை வலிமை சேர்ப்பதற்காக சிறுதானியங்களை கொண்டு தோசை செய்யலாம். கம்பு தோசை, ராகி தோசை, வரகு தோசை என  இதில் அரிசி ஒரு பங்குக்கு பதிலாக சிறுதானியத்தை ஒரு பங்கு சேர்த்துக் கொண்டு  கொழுந்தினை சேர்த்து அரைத்தால் போதுமானது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …