கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த 1994 ஆம் ஆண்டு பிறந்தவர் நடிகை பிரியங்கா மோகன் கடந்த 2019 ஆம் ஆண்டு தன்னுடைய 24-வது வயதில் கன்னட மொழியில் வெளியான ஒரு திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார்.
அதே வருடம் நடிகர் நாணி நடிப்பில் வெளியான நாணியின் கேங் லீடர் என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார். இதற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான SIIMA விருதை பெற்றிருந்தார்.
இது இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது. அதை தொடர்ந்து தமிழில் டாக்டர், எதற்கும் துணிந்தவன், டான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மட்டுமில்லாமல் தற்பொழுது நடிகர் தனுசுடன் கேப்டன் மில்லர், நடிகர் ஜெயம் ரவியின் பிரதர் திரைப்படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
அவ்வப்போது ரசிகர்களுடன் கலந்துரையாடுவதை வாடிக்கையாக வைத்திருக்கும் பிரியங்கா மோகன் தன்னுடைய முதல் திரைப்பட அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டிருந்தார்.
அவர் கூறியதாவது நான் முதன் முதலில் படங்களில் நடிக்கிறேன், அதனுடைய பயம் இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் என்னுடைய குடும்பத்தினர் பயப்படுவதை கண்டு தான் எனக்கு மிகவும் பயமாக இருந்தது.
ஏனென்றால் என்னுடைய குடும்பத்தில் யாருக்குமே சினிமா, மீடியா என்று எந்த துறையிலும் சம்பந்தம் கிடையாது. என்னுடைய முதல் படத்தில் நடிக்கும் போது என்னுடைய வீட்டில் இருப்பவர்களே பயப்பட்டார்கள்.
சினிமாவில் பாதுகாப்பு எந்த அளவுக்கு இருக்கும்..? பெண்களுக்கு பாதுகாப்பான இடமா.? என்றெல்லாம் மிகவும் பயப்பட்டார்கள்.
ஆனாலும் அதனை எல்லாம் தாண்டி நான் முதல் படத்தில் நடித்து முடித்தேன். முதல் படம் வெளியாகிய நாள் அன்று என்னுடைய குடும்பத்தினர் மிகவும் சந்தோஷப்பட்டார்கள். மகிழ்ச்சி அடைந்தார்கள். பெருமைப்பட்டார்கள்.
இது எனக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருந்தது. என்னுடைய படம் ரிலீஸ் ஆகும் வரை எனக்கு இருந்த பயம்.. படம் ரிலீஸ் ஆனதும் போய்விட்டது. அப்போது என் குடும்பம் என நினைத்து மிகவும் பெருமைப்பட்டது.. மகிழ்ச்சியாக இருந்தார்கள்.
அந்த நொடியில், இவர்களுக்கு இன்னும் நிறைய மகிழ்ச்சி கொடுக்க வேண்டும் நிறைய பெருமைகளை தேடித் தர வேண்டும் என்று நினைத்தேன். அதற்கான முயற்சிகள் பயணித்துக் கொண்டிருக்கிறேன் என பேசி இருக்கிறார் பிரியங்கா மோகன்.
எல்லாவற்றிற்கும் மேலாக என்னுடைய குடும்பம் தான் என்னுடைய உலகம். தன்னுடைய குடும்பத்தை தாண்டி தான் மற்ற எல்லா விஷயங்களும் எனக்கு பிரியங்கா மோகன்.