“எங்க போனாலும் சாண்டி-யை பத்தி கேக்குறாங்க..” – சீக்கிரம் அழிக்கனும்..! – காஜல் பசுபதி ஓப்பன் டாக்..!

மாநாட மயிலாட நிகழ்ச்சியின் மூலம் நடன பயிற்சியாளராக அறிமுகமானியவர் நடிகர் சாண்டி. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்து கொண்டு அசத்தினார்.

நடனத்தின் மேல் இருந்த காதல் இவருக்கு நடனத்தின் மூலம் பல்வேறு நல்ல பலன்களை பெற்றுக் கொடுத்திருக்கிறது. இடையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான சாண்டிக்கு பல்வேறு நடிகர்களின் படங்களில் நடனப் பயிற்சியாளராகவும் வாய்ப்பு கிடைத்தது.

உச்சகட்டமாக நடிகர் கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் கமலஹாசனுக்கு நடனம் பயிற்சியாளராகவும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. ஆரம்ப காலத்தில் திரைப்படங்களில் வெள்ளி கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த நடிகை காஜல் பசுபதியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சாண்டி.

ஆனால் இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் மனக்கசப்பு ஆகியவை இவர்களுடைய விவாகரத்துக்கு வழி ஏற்படுத்தி விட்டது. அதன் பிறகு, இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுக்கு அப்பா ஆகி இருக்கிறார்.

இது ஒரு பக்கம் இருக்க, காஜல் பசுபதி சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார். அதில் அவரிடம் நீங்கள் சாண்டியை பிரிந்து விட்டீர்கள். அது பற்றி கூறுங்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த காஜல் பசுபதி, எங்கு சென்றாலும் சாண்டியை பற்றி தான் கேட்கிறார்கள். அவனைப் பற்றி நான் என்ன சொல்வது…? அவன் சந்தோஷமாக இருக்கிறான்.. நல்ல பையன்.. அவனை ஃப்ரீயா விடுங்கள்.. அவ்வளவுதான் என்று கூறினார்.

அதன் பிறகு சாண்டியை நீங்கள் பிரிந்து விட்டீர்கள் என்றாலும் அவருடைய டாட்டுவை கையில் இருந்து எடுக்காமல் வைத்திருக்கிறீர்கள். இதற்கு என்ன காரணம்..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த காதல் பசுபதி இதை தடுக்கக் கூடாது என்ற எந்த எண்ணமும் எனக்கு கிடையாது. இந்த டாட்டு என்னுடைய நண்பர் தான் போட்டுவிட்டார் அவரிடம் சென்று தான் இதனை நீக்க வேண்டும்.

அவர் இருக்கும்பொழுது நான் பிஸியாக இருப்பேன் நான் இருக்கும் பொழுது அவர் பிஸியாக இருக்கிறார் இப்படி எங்களுக்குள் நேரம் ஒத்துப்போகாத காரணத்தினால் தான் இந்த நாட்டு வை எடுக்காமல் இருக்கிறேன் மற்றபடி இது டேட்டு எடுக்கக் கூடாது என்ற எந்த எண்ணமும் எனக்கு கிடையாது கூடிய விரைவில் எடுத்து விடுவேன் என கூறியிருக்கிறார் காஜல் பசுபதி

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam