நடிகர்கள் விஜய், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் இயக்குனர் அட்லி குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மெர்சல். ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இந்த மெர்சல் திரைப்படம் கலவையான விமர்சனங்களுடன் வசூல் ரீதியாக ஒரு நல்ல படமாகவே அமைந்தது.
ஆனால், இந்த படத்தின் கதை நடிகர் கமலஹாசன் நடிப்பில் வெளியான அபூர்வ சகோதரர்கள் படத்தின் டிட்டோ என்று கூறப்பட்டது. அதற்கு ஏற்றார் போல நடிகர் கமல்ஹாசன் செய்த ஒரு குசும்பும் இணையவாசிகளால் அதிகம் வைரலாக்கப்பட்டது.
அது என்னவென்றால்.. மெர்சல் படம் நன்றாக இருக்கிறது.. எனக்கூறி இயக்குனர் அட்லி குமாரையும் நடிகர் விஜய்யையும் அழைத்து பாராட்டி கௌரவிக்கும் விதமாக போட்டோவுக்கு போஸ் கொடுத்திருந்தார் நடிகர் கமலஹாசன்.
ஆனால், சுவற்றில் அபூர்வ சகோதரர்கள் போஸ்டரை ஒட்டி வைத்து அதற்கு முன்பு நின்றபடி போஸ் கொடுத்திருந்தார் கமல்ஹாசன். இதனை பார்த்த ரசிகர்கள் கமல்ஹாசன் வேண்டுமென்றேதான் அபூர்வ சகோதரர்கள் போஸ்டரை ஒட்டி வைத்திருக்கிறார் என்று விமர்சனம் செய்தனர்.
இது எல்லாம் ஒரு பக்கம் இருக்க இந்த படத்தினால் கடுமையான தோல்வியை சந்தித்தார் தயாரிப்பாளர் ஹெச்.முரளி என்று தான் கூற வேண்டும். இந்த படத்திற்கு பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சிலர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் இந்த படத்திற்கு இலவசமாக ப்ரமோஷன் கிடைத்தது.
இதனால் மேலும் சில நாட்கள் இந்த படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியது. ஆனாலும் கூட இந்த படம் தோல்வி படமாகவே தயாரிப்பாளர் அமைந்திருக்கிறது.
மெர்சல் படத்திற்கு பிறகு சங்கமித்ரா மற்றும் இன்னும் சில திரைப்படங்களை தயாரிக்கும் முடிவில் இந்த நிறுவனம் ஈடுபட்டது. ஆனால், மெர்சல் படத்தின் தோல்வி இவர்களை சுற்றி சுற்றி சிக்கலில் சிக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
மெர்சலில் விழுந்த தயாரிப்பாளர் தற்பொழுது வரை ஏழுந்திருக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். ஒரு காலத்தில் சிறு பட்ஜெட் படங்களை எடுத்து மிகப்பெரிய லாபம் ஈட்டி வந்த ஒரு நிறுவனம் ஒரே ஒரு படத்தில் பெரிய பட்ஜெட்டில் எடுத்து பெரிய வசூலும் செய்ய முடியாமல் திணறி தரைதட்டி நிற்கிறது.
பொதுவாக தேனாண்டாள் ஃபிலிம்ஸ் என்றாலே அதற்கென்று ஒரு தனி ஃபார்முலா இருக்கிறது. ரசிகர்களை கவரக்கூடிய விதமாக படங்கள் அதே சமயம் லோ பட்ஜெட்டில் இருக்கக்கூடிய படங்கள் போன்றவற்றை தான் தேர்வு செய்வார்கள்.
ஆனால் நடிகர் விஜயின் படம் என்பதால் படத்தின் பட்ஜெட்டை ஏகத்துக்கும் ஏற்றி கொடுத்திருக்கிறார்கள் அவர்கள் ஏற்றி கொடுத்ததை விடவும் இயக்குனர் அட்லி பட்ஜெட்டை எதிர வைத்திருக்கிறார். கடைசியாக படத்தில் பணியாற்றிய மேஜிக் மேன் இன்னும் சில வெளிநாட்டு சண்டை கலைஞர்களுக்கு சம்பளம் தரவில்லை என்ற குற்றச்சாட்டு வேறு இருந்தது.
மெர்சல் படத்திற்கு பிறகு பல படங்களை தயாரிக்க முயற்சி செய்தும் பூஜை கூட போட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார் மெர்சல் படத்தின் தயாரிப்பாளர் ஹெச்.முரளி.