“நயன்தாரா-வுக்கு அந்த பழக்கம் இருக்கு.. வேணாம்-ன்னு சொன்னாங்க..” – நடிகை சமந்தா ஓப்பன் டாக்..!

நடிகை சமந்தா விடம் சமீபத்திய பேட்டி ஒன்றில் விவகாரமான கேள்வி ஒன்று எழுதப்பட்டது. அதில் சாகுந்தலம் திரைப்படத்தில் நீங்கள் ஹீரோயினாக நடித்திருந்தீர்கள். ஆனால் உங்கள் கதாபாத்திரத்திற்கு நிகராக இன்னொரு கதாபாத்திரத்தில் இன்னொரு ஹீரோயின் அதிதி பாலன் நடித்திருந்தார்.

இது எப்படி..? உங்களுக்கு தெரியாமல் நடந்து விட்டதா..? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நடிகை சமந்தா என்ன பதில் கூறினார். அதற்கு, ரசிகர்களின் ரியாக்ஷன் எப்படி இருக்கிறது என்று இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

நடிகை சமந்தா சாகுந்தலம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் நடிகை அதிதி பாலனும் சமந்தாவுக்கு நிகரான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இது குறித்து சமந்தா விடம் எப்படி உங்களுக்கு நிகரான ஒரு கதாபாத்திரத்தை உங்கள் படத்தில் அனுமதித்தீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த நடிகை சமந்தா… ஏன்..? நான், கீர்த்தி சுரேஷின் மகாநடி திரைப்படத்தில் நடிக்கவில்லையா..? எனக்கு புரியவில்லை.. ஏன்.. ஒரு நடிகை இன்னொரு முன்னணி நடிகையின் படத்தில் நடிக்க கூடாது என்று கூறுகிறார்கள்.

இன்னும் சொல்லப்போனால் காத்து வாக்குல் ரெண்டு காதல் திரைப்படத்தில் நயன்தாரா ஹீரோயின்.. நான் இரண்டாவது ஹீரோயின் என்று கூறினார்கள். நானும் ஒப்புக்கொண்டேன்.

அப்பொழுது என்னுடைய கதாபாத்திரத்தை நயன்தாரா டம்மியாக்கி விடுவார். இந்த பழக்கம் நடிகை நயன்தாராவுக்கு இருக்கிறது. இரண்டு ஹீரோயின் சப்ஜெக்ட் படம் என்றால் இரண்டாவது ஹீரோயினை நயன்தாரா டம்மியாக்கி விடுவார் என்று என்னை நடிக்க வேண்டாம் என சிலர் கூறினார்கள்.

ஆனால் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் அப்படி எதுவும் எனக்கு நடக்கவில்லை. படப்பிடிப்பு தளத்தில் எனக்கு துணையாக இருந்தார். அந்த படத்தில் நடித்ததற்கு பெருமைப்படுகிறேன்.

என்னுடைய கதாபாத்திரத்திற்கும் நல்ல ஸ்கோப் இருந்தது. இது ஒரு நல்ல முன்னெடுப்பு என்று நான் கருதுகிறேன். இன்னார் இந்த படத்தில் நடித்தால் நான் நடிக்க மாட்டேன் என்று கூறுவது வியப்பாக.

அவரவர் கதாபாத்திரம் எப்படி இருக்கிறது..? அது தங்களுக்கு நிறைவாக இருக்கிறதா…? என்று பார்த்தாலே போதுமானது.. என்று பதிவு செய்திருக்கிறார் நடிகை சமந்தா.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam