அர்ச்சனாவுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நிக்சன்..! – ஆனால், கமல்ஹாசன் கண்டித்தது யாரை தெரியுமா..?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர் அர்ச்சனாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கம் விதமாக நிக்சன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் 10-வது வாரத்தை எட்டி இருக்கிறது.

முதலில் 18 போட்டியாளர்கள்.. பின்னர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக 5 போட்டியாளர்கள் என பங்கேற்றனர்.

தற்போது வரை 12 பேர் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியுள்ளனர். இந்நிலையில் இந்த வார தொடக்கத்தில் இருந்து அர்ச்சனாவுக்கும், நிக்சனுக்கும் மோதல் போக்கு நிலவுகிறது.

முதலில் சமைக்கும்போது அர்ச்சனா அருகில் நின்றால் கவனக்குறைவு ஏற்படுவதாகவும் அவரை சமையலறை பக்கம் வர வேண்டாம் என்று நிக்சன் கூறுகிறார். இந்த வாக்குவாதம் மோதலில் முடிந்தது.

அடுத்து கல்லூரி டாஸ்க் ஆசிரியர்களாக வந்த அர்ச்சனாவும் நிக்சன்-னும் மாறி மாறி கருத்துக்களை தெரிவித்ததால் இருவரும் இடையே மோதல் வெடித்தது. இந்நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் சக பிக் பாஸ் போட்டியாளர் வினிதா பற்றி உருவ கேலி செய்த சம்பவத்தை நினைவூட்டி அர்ச்சனா பேசினார்.

இதனால் கடுமையாக கோபமடைந்த நிக்சன் அர்ச்சனாவை ஒறுமையில் பேசி திட்டுகிறார். உச்சகட்டமாக கொலை மிரட்டல் மற்றும் பாலியல் மிரட்டல் விடுக்கும் விதமாக சொறுவிடுவேன் டி.. உள்ளிட்ட வார்த்தைகளை பயன்படுத்தி பேசியிருக்கிறார்.

முன்னதாக பெண்களுக்கு எதிரான தவறான கருத்துக்களை பேசுகிறார். பெண்களை பயன்படுத்தும் விதமாக நடந்து கொள்கிறார் என்ற காரணங்களை முன்னிறுத்தி பிரதீப் ஆண்டனி ரெக்கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டார்.

மட்டுமல்லாமல் போட்டியாளர் விஜய் வர்மா.. அப்படி அடித்து விடுவேன் என்பது போன்ற ஒரு ஆக்சனை காட்டியதற்காக மஞ்சள் கார்டு கொடுக்கப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டார். இந்நிலையில், போட்டியாளர் வினுஷாதேவியின் உருவம் குறித்து ஆபசமாக வர்ணித்த நிக்சன்.. தற்பொழுது அர்ச்சனாவுக்கு கொலை மற்றும் பாலியல் மிரட்டல் விடுக்கும் விதமாக சொருகிடுவேன் போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி மிரட்டல் விடுத்திருக்கிறார்.

கமலஹாசன் இது குறித்து என்ன பேச போகிறார்..? என்ற கேள்வி இணையத்தில் வியாபித்து இருந்திருக்கிறது. ஆனால் முன்கூட்டியே ரசிகர்கள் பலரும் தங்களுடைய கணிப்புகளை வெளியிட்டு இருக்கிறார்கள்.

கண்டிப்பாக அர்ச்சனாவை தான் கமலஹாசன் திட்டுவார். அவர் நிகழ்ச்சி தொகுத்து வழங்கும் முறை சரி கிடையாது. அவர் ஒரு மண்டை குழம்பிய ஆசாமி போல் செயல்படுகிறார்.

கமல்ஹாசன் கண்டித்தது யாரை..?

முந்தைய பிக்பாஸ் சீசன்களில் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு துணையாக அவரை பேசி வந்தார். ஆனால், தற்போது கமல்ஹாசன் கனடித்தது யாரை..? என்ற கேள்விக்குவ விடையே இல்லை.

பாதிக்கப்பட்டவர்களை அம்போ என விட்டுவிட்டு.. பிரச்சனை செய்தவர்களை.. நல்லவர்கள் என்று காட்டும் விதமாகவோ.. அல்லது அவர்கள் செய்தது ஒன்றும் பெரிய தவறு கிடையாது.. என்பதை நிரூபிக்கும் விதமாகவுமே அவர் நிகழ்ச்சியை நகர்த்தி சொல்கிறார்.

மற்ற மொழிகளில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள். ஒரு தவறு நடந்தால் அந்த தவறு செய்தவரை தட்டிக் கேட்கிறார்கள்.

ஆனால் நடிகர் கமலஹாசன் கைகட்டி வேடிக்கை பார்க்கிறார். மௌனியாக இருக்கிறார். சம்பந்தமே இல்லாமல் தன்னுடைய தனிப்பட்ட அருமை பெருமைகளை பேசி அந்த விஷயத்தை பூசி மொழுகவே முயற்சி செய்கிறார்.

இருவர் மீதும் தவறு இருக்கிறது என்பது போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்க முயற்சிக்கிறாரே.. தவிர.. யார் தரப்பில் நியாயம் இருக்கிறது.. யார் மீது தவறு இருக்கிறது என்ற முடிவுக்கு கமலஹாசனால் வர முடியவில்லை. ஆனால், போட்டியாளர் பிரதீப் ஆண்டனியை தவறான புகார்களின் பேரில்.. தவறான முடிவை எடுத்து.. தவறான முறையில் வெளியே அனுப்பி விட்டார்.

தன்னை பெண்களுக்கு பாதுகாப்பான ஒரு நபர் என்று காட்டிக்கொள்ள பிரதீப் ஆண்டனியை வெளியேற்றி விட்டார். இவர், பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு விலகிக் கொள்வது நல்லது.

அரசியலில் பயணித்துக் கொண்டிருப்பவர் இப்படி ஒரு விளையாட்டு நிகழ்ச்சியில் தன்னுடைய முடிவெடுக்கும் திறன்மையை காட்டுவது அவருடைய எதிர்காலத்துக்கு சிறப்பாகாது என்று கடுமையான கருத்துக்களை கமலஹாசன் நோக்கி வீசி வருகிறார்கள் ரசிகர்கள்.

பொறுத்திருந்து பார்ப்போம் நடிகர் கமலஹாசன் இந்த வாரம் நிக்சனுக்குகு எதிராக பேசுவாரா..? அல்லது மீண்டும் அர்ச்சனா நீங்கள் செய்ததும் தவறுதான்.. நிக்சன் செய்ததும் சரியல்ல.. என்று பூசி மொழுப்புவாரா.. என்பதை என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam