நடிகர் லிவிங்ஸ்டன் மதம் மாறியது தொடர்பாக அளித்து இருக்கக்கூடிய பேட்டியின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
நடிகர் லிவிங்க்ஸ்டன் கிறிஸ்தவ மதத்திலிருந்து குடும்பத்துடன் தன்னுடைய தாய் மதமான ஹிந்து மதத்திற்கு திரும்பி இருக்கிறார். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் திரைக்கதை எழுத்தாளராகவும் வசனகர்த்தாவாகவும் பல படங்களில் பணியாற்றி இருக்கிறார்.
ஆரம்பத்தில் திரைப்படங்களில் இவருடைய உண்மையான பெயரான ராஜன் என்பது தான் பயன்படுத்தினார் 1988ல் வெளிவந்த பூந்தோட்ட காவல்காரன் என்ற திரைப்படத்தின் மூலம் தான் இவர் சினிமாவில் அறிமுகமானார்.
பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். ஹீரோவாகவும் குணசித்திர வேடங்களிலும் கலக்கியிருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான சுந்தர புருஷன் என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள் அதில் மூத்த மகளின் பெயர் ஜோவிகா. தற்போது சினிமாவில் நடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். இருந்தாலும் தற்போது சீரியல் நடித்துக் கொண்டிருக்கிறார் பூவே உனக்காக என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், லிவிங்ஸ்டன் சமீபத்திய பேட்டி ஒன்றில் நான் மதம் மாறலாம் என்று நினைத்தேன். கிறிஸ்துவனாக இருந்து எனக்கு போர் அடித்து விட்டது.
அதனால் என்னுடைய தாய் மதமான ஹிந்து மதத்திற்கு மாறிவிட்டேன். ஆரம்பத்திலிருந்து நான் கிருஷ்ணனுடைய பரமபக்தன்.
அதனால், ஹரே ராமா ஹரே கிருஷ்ணா என்று என்னுடைய கடைசி காலத்தை கழிக்கலாம் என தாய் மதம் திரும்பிவிட்டேன் என்று கூறியிருக்கிறார். அதனால் தான் தன்னுடைய குடும்பத்தினர் பொட்டு வைத்திருக்கிறார்கள் எனவும் பேசியிருக்கிறார்.
இவருடைய வீடியோ இணையத்தில் வைரலாகி விடுகிறது. லிவிங்ஸ்டன் அவர்கள் தன்னுடைய தாய் மதத்திற்கு இருக்கு திரும்பியது மகிழ்ச்சி.
ஆனால், கிறிஸ்துவ மதம் எனக்கு போர் அடித்து விட்டது என்று கூறியது நெருடலாக இருக்கிறது. அப்படி பேசியதை நிச்சயம் தவிர்த்து இருக்கலாம். மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு மதத்தை.. அதன் நம்பிக்கை சார்ந்து வாழும் பொழுது.. ஒரு மதத்தில் இருந்தது எனக்கு போர் அடித்து விட்டது என பேசுவது ஒரு வித நெருடலான உணர்வை கொடுக்கிறது. இதனை லிவிங்ஸ்டன் தவிர்த்து இருக்கலாம் என்றும் தாய் மதம் திரும்பியதற்கு பாராட்டுக்கள் என்றும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர் இணைய வாசிகள்.