நடிகர் விஜய் பவர் ரேஞ்சர்ஸ் கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகர் விஜய் இயக்குனர் பரதன் இயக்கத்தில் அழகிய தமிழ் மகன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் படு தோல்வியை சந்தித்தது. கதாநாயகனுக்கு இருக்கும் எக்ஸ்ட்ரா சென்சரி பவர் என்ற ஒரே ஒரு சக்தி அதனை சுற்றி இருக்கக்கூடிய நல்லது கெட்டது ஆகியவை மட்டுமே படமாக இருந்தது.
மோசமான திரைக்கதை ரசிகர்களை கவர தவறியது. இந்த திரைப்படத்தில் நடிகை ஸ்ரேயா ஹீரோயினாக நடித்திருந்தார்.
இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே வழக்கம்போல ஹிட் அடித்தன. இந்த படத்தில் நடிகர் விஜய் பவர் ரேஞ்சர்ஸ் கெட்டப் போட்டுக் கொண்டு நிற்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அழகிய தமிழ் மகன் படம் வெளியான நேரத்தில் பவர் ரேஞ்சர்ஸ் இளசுகள் மத்தியிலும் குறிப்பாக குழந்தைகள் மத்தியிலும் மிகவும் பிரபலமான ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியாக இருந்தது.
விஜய்க்கு குழந்தை ரசிகர்கள் அதிகம். அவர்களை கவரும் விதமாக பவர் ரேஞ்சர்ஸ் கெட்டப்பில் நடிகர் விஜய் ஏதேனும் ஒரு காட்சியில் தோன்ற இருந்திருப்பார் போல் தெரிகிறது.
ஆனால் இந்த கெட்டப்பில் படத்தில் எந்த காட்சியும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.