விஷால் நடிக்க வந்ததற்கு காரணம் என்னன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

தமிழ் சினிமாவில் வெள்ளந்தியான நடிகர் என்று பெயர் பெற்ற நடிகர் விஷால் திரைப்பட தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறார். இவரது அப்பா ஜிகே ரெட்டி ஒரு மிகச் சிறந்த திரைப்பட தயாரிப்பாளர்.

நடிகர் விஷால் ஆக்சன் படங்களில் நடித்ததின் மூலம் மிகவும் பிரபலமான நபராக மாறினார். ஆனால் அவருக்கு நடிப்பின் மீது ஆரம்ப நாட்களில் அந்த அளவு ஈடுபாடு இல்லாமல் இருந்தது. இதனை அடுத்து இவர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார்.

இதனை அடுத்து இவர் செல்லமே என்ற படத்தில் கதாநாயகனாக நடித்த படம் வெற்றி பெற்ற பிறகு இவருக்கு பல படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் சண்டைக்கோழி, திமிரு, தாமிரபரணி, மலைக்கோட்டை போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

எனினும் இடையில் இவரது படங்கள் கடும் தோல்வியை சந்தித்தது. இதனை அடுத்து தயாரிப்பில் களம் இறங்கிய இவர் பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், பூஜை போன்ற படங்களை தயாரித்து நடிக்கவும் செய்தார்.

நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராக 2015-இல் தேர்வு செய்யப்பட்ட இவர் மீது பலவிதமான விமர்சனங்கள் எழுந்தது. 45 வயதை எட்டி இருக்கும் இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளி வந்த திரைப்படம் மார்க் ஆண்டனி இந்த படம் இவருக்கு நல்ல வெற்றியை தந்தது.

இந்நிலையில் இவரது தந்தை அண்மை பேட்டி ஒன்றில் தனது இரண்டு மகன்கள் குறித்து சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். இதில் முதல் மகனை ஹீரோவாக வேண்டும் என்று இவர் நினைத்திருக்கிறார்.

ஆனால் அவர் நடித்த படங்கள் அந்த அளவு வெற்றி அடையவில்லை. அதை அடுத்து கவலை கொண்ட இவரது அப்பாவிற்கு, அம்மா விஷாலை நடிக்க வைக்கலாமே என்று கூறியிருக்கிறார்.

அந்த வகையில் விஷாலை பல நாட்கள் வேண்டி நடிக்க தினம் தினம் டார்ச்சர் செய்து வந்தேன். இதனை அடுத்து ஒரு வழியாக நடிக்க விஷால் ஒத்துக்கொண்டார் என்ற விஷயத்தை தற்போது தெரிவித்து அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி விட்டார்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam