திடீரென 2-வது திருமணம் செய்து கொண்ட சாண்டியின் முதல் மனைவி..! யாருன்னு பாருங்க..!

சமீபத்தில் வெளி வந்த லியோ திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஈடு கொடுக்கக்கூடிய அளவு தனது வில்லன் கேரக்டர் ரோலை பக்காவாக செய்த டான்ஸ் மாஸ்டர் மற்றும் நடிகர் சாண்டி பற்றி உங்களுக்கு மிக நன்றாகத் தெரியும்.

அது போலவே இவரது  முன்னாள் மனைவி காஜல் பசுபதியை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. மிகச் சிறந்த நடிகையான இவர் பிக் பாஸ் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர்.

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கும் காஜல் பசுபதி அடிக்கடி சமூக வலைத்தளங்களில் பல விஷயங்களை ஓபன் ஆக பேசி தனது கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது தனக்கு இரண்டாவது திருமணம் முடிந்துவிட்டது என குறிப்பிட்டு ஒரு போட்டோவை அவர் வெளியிட்டு இருக்கிறார். இந்த போட்டோவை பார்த்து அனைவரும் அதிர்ந்து விட்டார்கள்.

திடீரென இது போல முடிவெடுத்து யாரை திருமணம் செய்து கொண்டீர்கள் என்பது போன்ற பல விதமான கேள்விகளை ரசிகர்கள் தற்போது முன்வைத்து இருக்கிறார்கள். இந்த கேள்விக்கு பதில் அளித்த  இருக்கக் கூடிய இவர், திடீர் என முடிவு செய்ததால் யாருக்கும் சொல்ல முடிய வில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

ஆனாலும் இவர் தற்போது போட்டிருக்கும் இந்த புகைப்படம் பழைய புகைப்படம் தான். எனவே அவர் பொய் சொல்கிறார் என அவரது ரசிகர்கள் கமெண்டில் தொடர்ந்து  தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

எனவே இதன் உண்மையான நிலை என்ன என்பதை காஜல் பசுபதி விளக்கினால் மட்டுமே உண்மை புரியும். அது வரை பல்வேறு வகைகளில் விமர்சனங்களுக்கு உள்ளாகும் என பலரும் தங்களது கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

எனவே விரைவில் உண்மை நிலை என்ன என்பதை காஜல் பசுபதி பகிர்வார் என்ற எண்ணத்தில் ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam