கேப்டனை பார்க்க ஓடோடி வந்த விஜய்.. இதுவரை விஜய்யை இப்படி பார்த்ததில்லையே.. கண்ணீரில் ரசிகர்கள்..!

கேப்டனை பார்க்க ஓடோடி வந்த விஜய்.. இதுவரை விஜய்யை இப்படி பார்த்ததில்லையே.. கண்ணீரில் ரசிகர்கள்..!

கேப்டன் அவர்கள் நேற்று அதிகாலை உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். இது ஒட்டுமொத்த தமிழக மக்களையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கின்றது. தமிழக மக்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையாக, விடிவெள்ளியாக திகழ்ந்த கேப்டன் அரசியல் சூழ்ச்சிகள் உடன் நடித்த சக நடிகர்களின் துரோகம் ஆகியவற்றினால் விழுந்தார்.

அதன் பிறகு உடல்நிலை பாதிக்கப்பட்ட கேப்டன் படிப்படியாக உடல்நிலை மோசமாகி நேற்று காலமானார். தொடர்ந்து தமிழக மக்கள் மற்றும் திரை பிரபலங்கள் அரசியல்வாதிகள் என பலரும் அவருடைய உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பிரபல நடிகர் தளபதி விஜய் நடிகர் விஜயகாந்த் பார்ப்பதற்கு ஓடி வந்திருக்கிறார். நடிகர் விஜய் முதன் முதலில் அறிமுகமான திரைப்படம் விஜயகாந்தின் நாளைய தீர்ப்பு திரைப்படம் தான்.

இந்த படத்தின் நான் உன்னுடைய தம்பி அண்ணா.. எப்பொழுதும் நான் தோற்க மாட்டேன்.. என்ற வசனத்துடன் நடிகர் விஜயின் அறிமுகம் அமைந்திருக்கும். நடிகர் விஜய்க்கு ஒரு நல்ல அறிமுகத்தை கொடுத்தவர் நடிகர் விஜயகாந்த் என்று கூறலாம்.

இப்படி இருக்கும் நடிகர் விஜயகாந்த் மறைவை ஒட்டி நேற்று இரவு அவருடைய இறுதி சடங்கில் கலந்து கொள்ள வந்திருந்தார் நடிகர் விஜய்.

கட்டுக்கடங்கா கூட்டத்தில் நீந்தி வந்த நடிகர் விஜய் விஜயகாந்தின் பிரேதம் வைக்கப்பட்டுள்ள பெட்டியை பார்த்ததும் துவண்டு போனார். தன்னுடைய கையை அந்த பெட்டியின் மீது வைத்துக்கொண்டு தலையை பெட்டியின் மீது சாய்த்து விஜயகாந்த் முகத்தை சில நிமிடங்கள் பார்த்துக் கொண்டிருந்தார்.

அதன் பிறகு அங்கிருந்து செல்லும் வரை திரும்பத் திரும்ப விஜயகாந்தின் முகத்தை பார்த்து பார்த்து தேம்பி தேம்பி அழுத அவருடைய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் இதுவரை நடிகர் விஜய் இப்படி அழுது நாங்கள் பார்த்ததில்லை என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …