மக்கள் மத்தியில் இன்றும் மூன்று எழுத்து மந்திரமான எம்.ஜி.ஆர் என்ற எழுத்துக்கள் என்றும் தமிழக மக்களின் இதயங்களில் ஒட்டிக்கொண்டு இருக்கிறது. அதற்கு அவர் எந்த அளவு மக்களுக்காக உழைத்து இருப்பார் என்பதை ஒவ்வொரு அரசியல்வாதிகளும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
ஆரம்ப காலத்தில் நடிப்பின் மூலம் மக்களின் மனதை அறிந்து கொண்டு அவர்களுக்கு ஏற்றது போல் பல வகையான வசனங்களை பேசி, முதல்வராக உயர்ந்த எம்ஜிஆரை போலவே தமிழ் சினிமாவில் ஒரு கலைஞராக மட்டுமல்லாமல் நல்ல மனிதராக வலம் வந்தவர் தான் விஜயகாந்த்.
இவர் சுமார் 150 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து மக்களின் பேராதரவை பெற்றதோடு கேப்டன் என்ற அடைமொழியோடு அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டவர்.
கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்த விஜயகாந்த்திற்கு ஏராளமான சிகிச்சைகளை மருத்துவமனையில் கொடுத்த போதும் நம்மை மீளாத துயரத்துக்கு தள்ளி விட்டு விண்ணுலகம் நோக்கி சென்று விட்டார்.
திரை உலகில் மட்டுமல்லாமல் அரசியல் களத்திலும் இரும்பு பெண் மணியாய் கருதப்பட்ட ஜெயலலிதா அம்மாவிற்கு சிம்ம சொப்பனமாய் கர்ஜித்த சிங்கம் தான் கேப்டன். இவர் உள்ளதை உள்ளபடி மனம் என்ன சொல்கிறதோ, அதை பட்டென்று சொல்லி விடுவார்.
அப்படிப்பட்ட இவரை கருப்பு எம்ஜிஆர் என்று தமிழக மக்கள் அன்போடு அழைக்கிறார்கள். அதற்கு காரணம் எம்ஜிஆர் எப்படி சத்துணவு திட்டத்தைக் கொண்டு வந்து பள்ளி குழந்தைகளின் பசியாற்றினாரோ, அது போல பசித்தவர்களுக்கு வயிறு வாடாமல் உணவு அளிப்பதில் விஜயகாந்த் க்கு நிகராக வேறு எந்த நடிகரையும் உதாரணமாக கூற முடியாது.
குறுகிய காலத்திலேயே முதல்வராக கூடிய தகுதிகள் பல இருந்தும் அந்த இடத்தை நோக்கி முன்னேற விடாமல் நடந்த சதிகளையும் தகர்த்து ஒரு மாபெரும் மனிதராக மக்கள் மத்தியில் இன்று வரை வாழ்ந்தவர், இனி என்றும் மக்களின் நெஞ்சில் வாழ போகிறவர்.
இவருக்கும் எம்ஜிஆருக்கும் இடையே ஒரு ஒற்றுமை உள்ளதாக தற்போது கூறி வருகிறார்கள். அந்த ஒற்றுமை என்ன என்று இனி பார்ப்போம், புரட்சி செம்மல் என்று அழைக்கப்பட்ட எம்ஜிஆர் இறந்த நாள் டிசம்பர் 24 மார்கழி 9 வியாழக்கிழமை.
அது போலவே நமது கருப்பு எம்ஜிஆர் விஜயகாந்த் எம்ஜிஆர் போலவே டிசம்பர் மாதம் 28ஆம் தேதி மார்கழி 12 வியாழக்கிழமை அன்று சொர்க்கத்திற்கு சென்றிருக்கிறார். பொதுவாகவே இந்து மதத்தில் மார்கழியில் இறந்தவர்கள் சொர்க்கத்தை அடைவார்கள் என்பது ஓர் ஐதீகம்.
அந்த வகையில் மக்கள் விரும்பிய இந்த இரண்டு கலைஞர்களுமே மார்கழி மாதம் உயிர் துறந்து இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் எம்ஜிஆர் மீதும் அதீத பற்று கொண்டவராக விஜயகாந்த் திகழ்ந்ததோடு அவரது தீவிர ரசிகராகவும் இருந்திருக்கிறார்.
மேலும் எம்ஜிஆர் இறந்த நினைவு நாளின் போது ராமாவரம் தோட்டத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் விஜயகாந்த் உதவிகளை செய்து வருகிறார். அப்படி எம்ஜிஆர் மனதார நேசித்த கேப்டன் தற்போது எம்ஜிஆர் இறந்த அதே மாதத்தில் அதே நாளில் இறந்திருப்பது ரசிகர்களின் மத்தியில் பெரிய ஆச்சரியத்தை உண்டாக்கி உள்ளது.