தென்னிந்திய நடிகர் சங்கத்தில் தலைவராக நீண்ட காலம் பணியாற்றியவர் கேப்டன் விஜயகாந்த்.
இவர் பொறுப்பேற்கும் முன்பு நடிகர் சங்கம் கடனில் தத்தளித்துக் கொண்டிருந்தது. அப்போது தன்னுடைய தனிப்பட்ட நிகழ்ச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகள் சினிமா சார்ந்த விழாக்கள் ஆகியவற்றை நடத்தி அதன் மூலம் வந்த பணத்தைக் கொண்டும் தன்னுடைய தனிப்பட்ட முறையிலும் நிதி கொடுத்து நடிகர் சங்கத்திற்கான கடனை அடைத்தவர் கேப்டன் விஜயகாந்த்.
திரை உலக நட்சத்திரங்கள் நடிகர் விஜயகாந்த் மீது அளப்பரிய மரியாதை வைத்திருக்க காரணம் அவர் நடிகர் சங்கத்தில் இருந்த பொழுது எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் அதனை காது கொடுத்து கேட்டு அது என்ன விஷயம் என்ன செய்ய வேண்டும் என்று நடிகர் சங்கத்திலேயே பல்வேறு பிரச்சனைகளை முடித்து வைத்தவர்.
நடிகர் சங்கத்தில் இருந்து நீதிமன்றத்திற்கு ஒரு வழக்கு செல்கிறது என்றாலே அது விசித்திரமானதாக இருக்கும். ஆனால், தற்பொழுது இருக்கும் நடிகர் சங்கத்தில் என்ன பிரச்சனைகள் தீர்க்கப்படுகிறது என்று தெரியவில்லை.. தொட்டதற்கெல்லாம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படுகிறது.
இது ஒரு பக்கம் இருக்க, கடன் பிரச்சனை காரணமாக நடிகர் சங்கம் என்ற ஒரு சங்கமே கலைந்து விடும் என்ற நிலையில் அப்படி நடக்கக் கூடாது கலைஞர்களின் ஒற்றுமை முக்கியம் என்று பல்வேறு முயற்சிகள் எடுத்து இன்னும் தன்னுடைய சொந்த பணத்தையும் போட்டு நேர் சங்கத்தின் கடன்களை உயிரை கொடுத்து உழைத்து முற்றிலுமாக கட்டி முடித்த நடிகர் கேப்டனுக்கு தென் இந்திய நடிகர் சங்கத்தின் சார்பாக ஒரே ஒரு மலர் வளையம் கூட யாரும் கொண்டு வரவில்லை என்ற விஷயம் ரசிகர்களை விரக்தியில் ஆழ்த்தியிருக்கின்றது.
பல்வேறு நடிகர்கள் நடிகர் சங்கத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து வருவதை பார்க்க முடிகிறது. குறிப்பாக ஒற்றுமை என்ற ஒன்று கிடையாது. ஏதோ கட்டிடம் கட்டுகிறோம் என்று ஏதேதோ விஷயத்தை செய்கிறார்கள்.
ஆனால், நடிகர்களுக்கு என்ன விஷயம் செய்தார்கள்.,.? என்ற கேள்வியும் பொதுமக்கள் தரப்பிலிருந்து எழுப்பப்பட்டு வருகிறது.. இதற்கு நடிகர் சங்கம் என்ன பதில் கொடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.