ஆந்திராவை சேர்ந்த நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த நடிகராக வளர்ந்து வந்தார். இவருடைய அப்பா ஜி.கே ரெட்டி ஒரு மிகச்சிறந்த தயாரிப்பாளராக இருந்த காரணத்தால் திரையுலகப் பிரவேசம் எளிதாக இவருக்கு கிடைத்தது.
தமிழ் திரையுலகில் “செல்லமே” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். பின்னர் தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறினார். இவர் திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் திரைப்படங்களை தயாரிக்க விஷால் பிலிம் ஃபேக்டரி என்ற நிறுவனத்தை ஏற்படுத்தினார்.
ஆரம்ப காலத்தில் ஆக்சன் கிங் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணி புரிந்த இவர் செல்லமே படத்தில் நடித்த பிறகு சண்டைக்கோழி, திமிரு, தாமிரபரணி, மலைக்கோட்டை போன்ற படங்களில் நடித்து தனது அபார நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இதனை அடுத்து வெளி வந்த படங்கள் இவருக்கு போதிய அளவு வெற்றியை தராத காரணத்தால் தனது தயாரிப்பு நிறுவனத்தில் சில படங்களை தயாரித்து இவர் நடித்திருக்கிறார். அந்த வகையில் பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், பூஜை போன்ற படங்களை தயாரித்து நடித்தார்.
மேலும் இவர் நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராக 2015 ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். இதனை அடுத்து பல சிக்கல்களில் சிக்கிய விஷால் மீது பல் வேறு வகையான விமர்சனங்கள் எழுந்தது.
அவற்றையெல்லாம் சற்றும் பொருட்படுத்தாத இவர் தற்போது 45 வயதை கடந்தும் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக வெளி வந்த மார்க் ஆண்டனி திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது.
இதனை அடுத்து அமெரிக்காவில் நியூயார்க் சிட்டியில் இளம் பெண்ணுடன் ஊர் சுற்றிய வீடியோ அண்மையில் இணையதளத்தில் வெளி வந்து பரபரப்பை ஏற்படுத்தியது. அது நிமித்தமாக அவர் கூறும் போது அது அவரது உறவினர் பெண் என்றும் பிராங் செய்வதற்காக அந்த வீடியோவை அவரை வெளியிட்டார் என்ற கருத்தையும் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் 2010ல் திரு இயக்கத்தில் வெளி வந்த “தீராத விளையாட்டுப் பிள்ளை” படத்தில் விஷால் நடித்திருந்தார். இந்த படத்தில் மூன்று பெண்களுடன் டேட்டிங் செய்யும் ரோலில் நடித்திருந்தவர் மீண்டும் அந்த படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்து உள்ளது.
அந்தப் படத்தின் பிரமோஷனுக்குத் தான் விஷால் இந்த பிராங் வீடியோவை வெளியிட்டு இருப்பதாக தற்போது விஷயம் வேகமாக இணையங்களில் பரவி வருகிறது.