தளபதி விஜய் என்றாலே தமிழ் திரை உலகில் ஒரு மாஸான ரசிகர் கூட்டம் இருப்பதோடு மட்டுமல்லாமல் அவருக்கு என்று ஒரு தனி இடமும் மக்கள் மத்தியில் உள்ளது என கூறலாம்.
அந்த வகையில் தளபதியின் அம்மா என்றால் சும்மாவா? பல விதமான பன்முக திறமையைக் கொண்டவர் தான் தளபதி அம்மா ஷோபனா சந்திரசேகர். இவர் ஒரு மிகச்சிறந்த பாடகி என்பது அனைவருக்கும் தெரியும்.
ஆனால் அவர் ஒரு மிகச்சிறந்த எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குனர் போன்ற திறமையை கொண்டவர் என்பது பலருக்கும் தெரிவதற்கு வாய்ப்பில்லை. இவர் தற்போது தனது கணவருடன் இணைந்து துபாய் சென்று இருக்கிறார்.
சோபாவுக்கும், தளபதி விஜய்க்கும் இடையே இருக்கும் உறவு மிகவும் அற்புதமானது என்று கூறலாம். எப்போதும் அம்மாவின் செல்லப் பிள்ளையாக இருக்கும் விஜய் நடிப்பில் வெளி வந்த லியோ திரைப்படம் கலவை ரீதியான விமர்சனத்தை பெற்றது.
இதனை அடுத்து அடுத்த படத்தின் ஷூட்டிங் சென்று கொண்டு இருப்பதால் அந்த படமாவது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய கூடிய வகையில் இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
தற்போது துபாயில் தான் ஷோபனா சந்திரசேகரின் அண்ணன் மகள் அதாவது எஸ்.என் சுரேந்தர் அவர்களின் மகள் பல்லவி வினோத்குமார் கணவனோடு செட்டிலாக இருக்கிறார். எனவே தனது மருமகள் பல்லவியுடன் நேரத்தை செலவிட்டு வரும் தளபதியின் அம்மா ஷோபனா வெளியிட்டு இருக்கும் ரீல்ஸ் வீடியோவை பார்த்து ரசிகர்கள் அசந்து விட்டார்கள்.
சமீபத்தில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து தனது அத்தை மற்றும் மாமா என்று குறிப்பிட்ட ஒரு புகைப்படத்தை பல்லவி ஏற்கனவே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். அப்போது தான் அது விஜயின் மாமன் மகள் என்பது அனைவருக்கும் தெரிய வந்தது.
இந்நிலையில் தற்போது பல்லவி வினோத்குமார் தனது அத்தை ஷோபா சந்திரசேகரோடு ரீல்ஸ் செய்திருக்கும் வீடியோவை இன்ஸ்டால் பதிவிட்டு இருக்கிறார். ஏற்கனவே ஷோபா சந்திரசேகர் செய்த சோ பியூட்டிஃபுல், சோ எலிகண்ட், ஜஸ்ட் லுக்கிங் லைக் வாவ் என்ற ரிலீஸ் வீடியோ வைரலானதை அடுத்து இந்த வீடியோவும் வைரல் ஆகிவிட்டது.