என்னடா.. சொல்றீங்க இளைய தளபதி விஜய்க்கு புதுசா ஒரு நோய் ஏற்பட்டு இருக்கிறதா? என்று ரசிகர்கள் அனைவரும் பாரந்தடித்துக் கொண்டு இந்த விஷயத்தை தற்போது பேசி இணையத்தில் வைரல் ஆக்கிவிட்டார்கள்.
தமிழகமே தற்போது கண்ணீரில் மிதக்கிறது என்று சொல்லக்கூடிய வகையில் கருப்பு எம்ஜிஆர் விஜயகாந்த் இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு இளைய தளபதி விஜய் சென்றது அனைவரும் அறிந்ததே.
அங்கு விஜயின் முகத்தைப் பார்த்து பலரும் பல வகைகளில் அதிர்ச்சி தரக்கூடிய கருத்துக்களை கூறியிருக்கிறார்கள்.
மேலும் துக்கம் தாங்காமல் அழுது, அழுது அவர் கண்ணம் இது போல புஸ் என்று உப்பி வீங்கி இருக்கலாம் என்று கூறியிருந்தார்கள்.
அவருக்கு ஸ்ட்ரெஸ் இருந்தாலும், இது போல இருக்கும் என ரசிகர்களின் மத்தியில் சமாளித்து விட்டார்கள். ஆனால் அண்ணன் விஜய் இரண்டு தினங்கள் கழித்து தூத்துக்குடி சென்ற போது அங்கு மக்களை சந்தித்து உதவி பொருட்களை வழங்கி இருந்தார்.
மேலும் அங்கு பலர் இதுbதான் நடிகர் விஜயா? அடையாளம் தெரியாத அளவிற்கு இருக்கிறார் என்று கூறி இருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு லியோ படத்தின் வெற்றி விழாவில் தோன்றிய விஜய் வழக்கம் போல குட்டி ஸ்டோரி சொல்லி கல கலப்பாகத்தான் இருந்தார்.
இதனை அடுத்து இவரது முகம் உப்ப ஆரம்பித்துள்ளது. முகம் உப்ப ஆரம்பித்த பிறகு இரண்டு கன்னங்களுக்கும் இடையே வீக்கம் இருந்த நிலையில் ஆள் அடையாளம் தெரியாத அளவு மாறி போயிருக்கிறார் விஜய் என்பது தான் உண்மை.
இதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று பலரும் யோசித்து வந்த வேளையில் அதற்கான விடை தற்போது கிடைத்துள்ளது. இவரின் தொண்டையின் இரண்டு பகுதிகளில் இருக்கும் தொரொக்ஸின் சுரப்பியில் கோளாறு ஏற்பட்டு இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக விஜயை நேரில் பார்த்த மருத்துவர் நிபுணர் மனோ அவர்கள் கருத்துக்களை கூறியிருக்கிறார்.
மேலும் இந்த சுரப்பி அதிகமாக சுரந்தால் கன்னங்கள் வீக்கம் அடைவது வழக்கமாக நடக்கும் நிகழ்வு தான். குறைவாக சுரந்தாலும் இது போல வீக்கம் ஏற்படும் என மருத்துவ நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள்.
இந்த சுரப்பி குறைவாக சுரப்பதன் மூலம் உடல் எடை அதிகரிக்க கூடும். அந்த வகையில் விஜய் நன்கு உயரமாக இருப்பதால் அவரது எடை தெரியவில்லை என்றும் அதிக அளவு சிக்கன் பிரியாணியை விரும்பி திங்கக்கூடிய இவர் நேரா, நேரத்துக்கு சாப்பிடக்கூடிய பழக்கம் கொண்டவர் என்பதால் அவரது உடல் எடை நமக்கு குறைவாக தோன்றுகிறது.
இந்த நிலையில் பொது மக்களால் அடையாளம் கண்டு பிடிக்காத நிலையில் தற்போது விஜய் மாறி இருப்பது கவலையான விஷயம், விரைவில் இந்த குறை சரியாகிவிடும் என்று ரசிகர்கள் உறுதியாக கூறியிருக்கிறார்கள்.
மேலும் இந்த விஷயமானது தற்போது இணையத்தில் படு வேகமாக பரவி விடுவதோடு விஜய்கே இப்படிப்பட்ட நிலையா? என்ற கேள்வியையும் பல முன் வைத்து இருக்கிறார்கள்.