தமிழ் சினிமா நடிகர்களில் இப்போது அதிக சம்பளம் வாங்குபவர்தான் நடிகர் விஜய்தான். வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் இப்போது நடித்துவரும் கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்துக்காக விஜய் பெறும் சம்பளம் 200 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. இதில் அப்பா, மகன் என இரட்டை கேரக்டர்களில் விஜய் நடிக்கிறார்.
விஜய் மக்கள் இயக்கம் மூலம், அடுத்தகட்டமாக அரசியலுக்கு முடிவில் இருக்கிறார் விஜய். அதற்காக தனது இயக்கம் வாயிலாக பலவிதமான நலத்திட்ட உதவிகளை விஜய் செய்து வருகிறார். முதலில் பிளஸ் 2, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தொகுதி வாரியாக பரிசுத்தொகை வழங்கினார். அது தமிழக மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து சில தினங்களுக்கு முன், மழையால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட மக்களுக்கு நெல்லையில், நிவாரண உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று நிவாரண பொருட்களை வழங்கினார். அந்த பொருட்களை வாங்குவதை காட்டிலும் விஜயுடன் பலரும் செல்பி எடுக்க அதிக ஆர்வம் காட்டினர். சிலர் நிவாரண பொருட்களை வாங்காமல் மறுத்தும் சென்றனர்.
இந்நிலையில், கன்னட நடிகர்களில் மிக முக்கியமான முன்னணி நடிகரான சிவராஜ்குமார் விஜய் குறித்த தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார். இவர் ஜெயிலர் படத்தில் ரஜினியின் நண்பராக நடித்து இருந்தார். இப்போது தனுஷ் நடித்து வெளிவர உள்ள கேப்டன் மில்லர் படத்திலும் சிவராஜ்குமார் நடித்துள்ளார். இவரை ரசிகர்கள் சிவாண்ணா என்றுதான் அன்பாக அழைக்கின்றனர்.
சிவராஜ்குமார் கூறுகையில், என்னுடைய 100வது படவிழா குறித்த நிகழ்ச்சியில் நடிகர்கள் விஜய், சூர்யா கலந்துக்கொண்டனர். விஜய் படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரது ஸ்டைல் வித்யாசமானது. அவர் கடுமையான உழைப்பாளி. நிறைய கஷ்டப்பட்டுதான் இந்த நிலைக்கு வந்திருக்கிறார். அவர் ஒரே இரவில் ஸ்டார் ஆகவில்லை. அவர் தன்னைத்தானே செதுக்கிக்கொண்டு முன்னேறி இருக்கிறார்.
அவர் மாணவர்களுக்கு உதவி செய்து, மாணவர்கள் மத்தியில் அவர் பேசிய வீடியோவை பார்த்தபோது பெருமையாக சந்தோஷமாக இருந்தது. அவரை சிறந்த ஒரு மனிதராகவே நான் பார்க்கிறேன். அரசியலுக்கு வருவதற்கான திறமை விஜயிடம் இருக்கிறது. அவர் தன்னை மிகவும் நம்புகிறார். அந்த நம்பிக்கை மக்களுக்கும் உள்ளது. நடிகர்கள் ஏன் அரசியலுக்கு ஏன் வர வேண்டும் என்பவர்கள், அரசியலுக்கு வந்த பின்னால் ஏற்றுக்கொள்கின்றனர். அதற்கான ஆளுமை விஜயிடம் இருக்கிறது, என சிவராஜ்குமார் கூறியுள்ளார். இது விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.