தமிழில் பல படங்களில் நடித்து தனக்கு என்று தனி இடத்தை பிடித்திருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் கடை திறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது பத்திரிக்கையாளர்கள் அவரிடம் விஜயகாந்துக்கு நேரில் அஞ்சலி செலுத்த வராத காரணத்தை கேட்டார்கள்.
இதற்கு பதில் அளித்து பேசிய அவர் நான் பாண்டிச்சேரியில் சுழல் 2 பட சூட்டிங்கில் இருந்த காரணத்தால் கேப்டனின் இறுதி அஞ்சலியில் கலந்து கொள்ள முடியவில்லை என்று கூறியிருந்தார்.
இதனை அடுத்து பல கேள்விகளைக் கேட்ட பத்திரிக்கையாளர்கள் நடிகர் சங்க கட்டிடத்திற்கு அவர் பெயரை வைப்பது குறித்து உங்களது கருத்து என்ன? என்று கேட்ட போது நான் இப்போது கடை திறப்பு விழாவிற்காக வந்திருக்கிறேன். நீங்கள் அது சம்பந்தமான கேள்விகளையும் மட்டும் கேட்டால் நன்றாக இருக்கும் என்று பேசினார்.
அத்தோடு வேறு கேள்விகள் எதுவும் கேட்க வேண்டாம் என்று கையெடுத்து கும்பிட்டு பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். மேலும் தொடர்ந்து கேள்விகளை எழுப்பிய பத்திரிக்கையாளர்களிடம் சற்று முகத்தை சிடுசிடு என்று வைத்துக்கொண்டு கடுகடுத்து பேசினார்.
அது மட்டுமல்லாமல் நடிகர் சங்க கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயரை வைக்கக்கூடிய அந்த கேள்விக்கு பொதுவான ஒரு கருத்தை கூறினாரே தவிர உள்ளன்போடு தன்னுடைய கருத்துக்களையும் அவர் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
திரையுலகில் மட்டுமல்லாமல் அரசியலிலும் அபார ஆளுமையை வெளிப்படுத்திய தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் உடல்நிலை குறைவு காரணமாக 28-ஆம் தேதி காலமானார்.
அவரின் அளப்பரிய சிறப்புகளை தெரிந்த நடிகை விஜயகாந்த் பற்றியும் நடிகர் சங்க கட்டிடத்திற்கு அவர் பெயரை வைக்க வேண்டும் என்று உணர்வு பூர்வமாக பேசாமல் இருந்தது பெருத்த சங்கடத்தை தந்தது.
இந்நிலையில் நேற்று சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்திற்கு ஐஸ்வர்யா ராஜேஷ் சென்று அஞ்சலி செலுத்தி விட்டு விஜயகாந்த் மிகவும் நல்ல மனிதர், அன்னாரது ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்று உருக்கத்தோடு பேசிய பேச்சை பார்த்து பத்திரிகையாளர்கள் அதிர்ந்து விட்டார்கள்.
எதற்கு காரணம் கடை திறப்பு விழாவில் ஒரு வார்த்தை கூட விஜயகாந்த் குறித்து பேச மாட்டேன் என்று மௌனத்தோடு இருந்த ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படி விஜயகாந் சமாதியில் நின்று அஞ்சலி செலுத்துவதோடு இது போன்ற பேச்சுக்களை எப்படி பேசி வருகிறார்.
தற்போது இருக்கும் அரசியல்வாதிகள் அனைவரும் இவரிடம் பிச்சை வாங்க வேண்டும் அந்த அளவு அரசியல்வாதிகலையே தோற்கடிக்க கூடிய வகையில் நடந்து கொண்டு இருப்பதாக இணையதள வாசிகள் நக்கலாக இந்த நிகழ்வை சித்தரித்து இருக்கிறார்கள்.