கே.ஜி.எஃப் 2 – முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..? – REAL TOOFAN : சுழன்றடிக்கும் சூறாவளி..!

பீஸ்ட் திரைப்படத்தின் விமர்சனங்கள் கலவையாக உள்ள நிலையில் நேற்று கேஜிஎப் திரைப்படம் வெளியாகி தாறுமாறான பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருவதால் பீஸ்ட் வர்த்தகம் மேலும் சரியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் திரைக்கு வந்தது. தமிழ் புத்தாண்டையொட்டி தொடர் விடுமுறை வருவதால் ஏப்ரல் 14ஆம் தேதி பீஸ்ட் திரைப்படத்தை வெளியிடுவது படக்குழு உறுதியாக இருந்து.

ஆனால், கன்னடத்தில் உருவாகி இந்தியாவின் எல்லா மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றுள்ள கேஜிஎப் திரைப்படமும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகவிருந்ததால் ஒருநாள் முன்னதாக விஜயின் திரைப்படம் வெளியானது.

வெளியான முதல் நாளே மோசமான விமர்சனங்களை பெற்று பீஸ்ட் படம் புஸ்வானம் ஆனது. விஜய்க்கு இருக்கும் பேமிலி ஆடியன்ஸ் தான் இந்த படத்தை கரை சேர்க்க வேண்டும் என்ற நிலை. ஆனால், மறுபக்கம் கே.ஜி.எஃப் ருத்ர தாண்டவம் ஆடி வருகின்றது.

கே.ஜி.எஃப் திரைப்படம் தான் இந்தியாவின் உண்மையான TOOFAN என்றும் படத்தின் பாதிப்பில் இருந்து வெளியே வரவே மிகவும் சிரமாமாக உள்ளது எனவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். உலகத்தரமான மேக்கிங்.. காட்சிக்கு காட்சி கூஸ்பம்ஸ்.. என ராக்கி பாயின் அட்ராசிட்டி வீர ராகவனை ஓரம் கட்டிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

இந்நிலையில், கே.ஜி.எஃப் மொழி வாரியாக முதல் நாள் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற விபரங்கள் நமக்கு கிடைத்துள்ளது.

KGF Chapter 2 earned 145 Cr India net on its first day for all languages

ஹிந்தி பதிப்பு :

Hindi Net: 54.00 கோடி (all-time record)

[Online Gross: Hindi: 52.20 Cr Gross (44 Cr Net) from 10800 shows (Offline shows data not included)]

கன்னட பதிப்பு :

Karnataka Gross: 35.40 கோடி

தெலுங்கு பதிப்பு :

AP/TG Gross: 33.05 கோடி

தமிழ் பதிப்பு :

Tamil Nadu Gross: 15.70 கோடி

மலையாள பதிப்பு :

Kerala Gross: 7.80 கோடி

All India Gross: 145.95

படத்தின் பாடிட்டிவ் விமர்சனங்கள் இதே வசூலை தொடர்ந்து நான்கு நாட்களுக்கு கொடுக்கும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …