நெல்லை சொதி குழம்பு

வீரத்துக்கு பெயர் போன நெல்லை சீமையிலே திருமணமான புதுமண தம்பதிகளுக்கு, திருமண விஷயங்களிலும் வைக்கக்கூடிய மிக முக்கிய குழம்பு வகைகளில் ஒன்றுதான் இந்த சொதி குழம்பு.மிகவும்  சுவையான இந்த சொதி குழம்பை எப்படி வைக்கலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  1.  முருங்கைக்காய் 
  2.  கேரட் 
  3. பீன்ஸ் 
  4. உருளைக்கிழங்கு 
  5. கத்திரிக்காய்
  6.  ஒரு தேங்காய் துருவியது
  7. சிறு பருப்பு
  8. உப்பு
  9. பச்சை மிளகாய்
  10. வரமிளகாய்

செய்முறை

முதலில் தேங்காயின் இரண்டு  மூடிகளையும் நன்கு துருவி தேங்காய் பால் எடுத்துக்கொள்ளவும். உங்களுக்கு நன்றாக தெரியும் நினைக்கிறேன் முதலில் எடுக்கும் முதல்தரமான பாலை தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.பிறகு இரண்டாம்தர, மூன்றாம்தர என மூன்று நிலைகளில் தேங்காய் பாலை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

மேற்கூறிய காய்கள் அனைத்தையும் சிறிது மஞ்சள் பொடி உப்பு கலந்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.இக்காய்களை முக்கால் பதத்திற்கு வேக வைத்தால் போதுமானது.

சிறிய குக்கரில் 200 கிராம் அளவு சிறு பருப்பை போட்டு நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

காய்கறிகள் மற்றும் பருப்பை வேகவைத்து பிறகு ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும். பின்னர் வெந்த காய்களை அதில் போட்டு நன்கு வதக்கிய பின் வேகவைத்த  பருப்பினை நன்கு குழைத்து அதில் சேர்த்துக் கொள்ளவும்.

பருப்புடன் சேர்ந்து காய்கள் நன்கு கொதித்து வரும் வேளையில் அடுப்பை மிதமான தீயில் வைத்து விட்டு முதல்தர பாலை அதில் சேர்க்க வேண்டும்.

 பின்னர்  கால் மணி நேரம் கழித்த பின் இரண்டாம்தர, மூன்றாம்தர பாலை ஊற்றி 10 நிமிடங்கள் கொதிக்கவிடவும் பின்னர் தேவையான உப்பு சேர்த்து தேவையான அளவு பொடியை சேர்த்துக் கொள்ளலாம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …