தமிழ் சினிமாவில் நயன்தாராவுக்கு கொடுக்கப்பட்டுள்ள பட்டம் லேடி சூப்பர் ஸ்டார். ஆனால் அப்படி என்னை தயவு செய்து கூப்பிடாதீங்க என, சமீபத்தில் நடந்த அன்னபூரணி படத்தின் பிரமோ நிகழ்ச்சியில், தொகுப்பாளர் விஜே அர்ச்சனாவிடம் நயன்தாரா, ரிக்வெஸ்ட் வைத்து கேட்டுக்கொண்டார். அதற்கு காரணம், லேடி சூப்பர் ஸ்டார் என்று சொன்னால், 10 பேர்தான் பாராட்டுகின்றனர். 50 பேர் என்னை திட்டுகின்றனர் என்ற அவரே வெளிப்படையாக கூறினார்.
ஆனால் நடிக்க வந்த புதிதில் நயன்தாரா, அறிமுக நாயகியாக மற்ற நடிகைகளை போல, ஹீரோவுடன் டான்ஸ் ஆடிக்கொண்டும், சில காட்சிகளில் அழுதுக் கொண்டும் செல்லும் சராசரி நாயகியாக தான் நடித்தார். அடுத்தடுத்த படங்களில் அவரது நடிப்பும், அவர் மீதான ஈர்ப்பும் ரசிகர்களுக்கு மிகவும் அதிகரித்த நிலையில், அவரை மையப்படுத்திய கதைகள் உருவாக்கப்பட்டு மெயின் கேரக்டர்களில் நயன்தாரா நடித்தார்.
அறம், இமைக்கா நொடிகள், மூக்குத்தி அம்மன், அன்னபூரணி, கனெக்ட், நெற்றிக்கண், வாசுகி, ஐரா என நயன்தாராவை மையப்படுத்திய படங்களுக்கு நல்ல வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைத்ததால், லேடி சூப்பர் ஸ்டார் பட்டமும் அவருக்கு வெகு எளிதாக கிடைத்துவிட்டது. திருமணமாகி, 2 பிள்ளைகளுக்கு தாயான பிறகும் நயன்தாரா இமேஜ், மார்க்கெட் சிறிதும் தமிழ் சினிமாவில் குறையவில்லை.
இந்தியில் அவர் பாலிவுட் ஸ்டார் நடிகர் ஷாருக்கானுடன் நடித்த ஜவான் படமும் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், மீண்டும் இந்தி பட வாய்ப்புகளுக்காக, நல்ல கேரக்டருக்காக காத்துக்கொண்டு இருக்கிறார்.
இந்நிலையில், நடிக்க வந்த புதிதில் நயன்தாரா ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், கஜினி படத்தில் நடித்திருந்தார். அதில் அசின் பிரதான நாயகியாகவும், நயன்தாரா 2வது கதாநாயகியாகவும் நடித்திருந்தார். அதற்கு பின் பல படங்களில் அவருக்கு அதுபோல் இரட்டை நாயகிகளில் ஒருவராகவே நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. நயன்தாரா பிடிவாதமாக மறுத்ததால்தான், பிரதான நாயகியாக சந்திரமுகி, வில்லு, வல்லவன் போன்ற படங்களில் நடிக்க முடிந்தது என்று இப்போதும் பீலிங் செய்து அதுபற்றி பேசி வருகிறார்.